Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்த
#1
<b>ஒரே ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்தை அழிக்க முடியும்</b>

ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினர் மீது விமானத் தாக்குதல் நடத்த முடியுமென அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் பானு விடுத்த அச்சுறுத்தலையிட்டு ஷ்ரீலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப எந்தவொரு தாக்குதலுக்கும் விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை உயரதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஷ்ரீலங்கா விமானப்படையினர் ஷ்ரீலங்காவின் வெவ்வேறு பிரதேசங்களிலும் நான்கு இடங்களில் ராடர் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அந்த நிலையங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் ராடர் கருவிகள் தாக்குதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அக்கருவிகள் மூலம் விமானம் ஒன்று தரையிலிருந்து ஆகாயத்தில் உயர எழுந்து செல்லும் முன்னரே கண்காணித்துத் தாக்குதலை நடத்த முடியுமென்றும் மேலும் ஷ்ரீலங்கா விமானப்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி புலிகள் இயக்க தலைவர் பானுவின் அச்சுறுத்தல்பற்றி விமானப் படையைச் சேர்ந்த சிரேஷ்ட விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், குறித்த புலிகள் இயக்கத் தலைவர் பானு "ஸ்வின்" வகையைச் சேர்ந்த இரண்டு சிறிய விமானங்களை வைத்துக் கொண்டு விமானப் படையினரை அச்சுறுத்துவதாகவும், ஷ்ரீலங்கா விமானப்படையிடம் இருக்கும் ஒரு மிக் விமானத்தின் மூலம் ஒரே ஒரு தாக்குதலில் இரணைமடுவிலிருக்கும் புலிகளின் விமானத் தளத்தை முற்றுமுழுதாக அழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

-திவயின : 12.01.2006-

Thinakural

http://www.thinakural.com/New%20web%20site...14/Shinhala.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஒரு மிக் விமானத் தாக்குதலில் புலிகளின் இரணைமடு விமானத் தளத்த - by Vaanampaadi - 01-14-2006, 10:36 AM
[No subject] - by நர்மதா - 01-14-2006, 10:55 AM
[No subject] - by அகிலன் - 01-14-2006, 01:52 PM
[No subject] - by ஊமை - 01-14-2006, 03:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)