Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி
#1
<b>சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி அம்பாறை அரசியல்துறை குற்றச்சாட்டு! </b>


அம்பாறை மாவட்ட கஞ்சிக்குடியாற்றுப் பகுதியில் இராணுவத்தினரும், தேசவிரோதக் குழுவினரும் இணைந்து நேற்று முன்தினம் ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் வெளியான செய்தியை அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அரசியல்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதச் சக்திகளும் தமிழ் மக்களை திசை திருப்பும் வகையில் பலதரப்பட்ட பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில்தான் நேற்று முன்தினம் சிங்கள ஊடகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறுபேரை கொன்றுள்ளதாக வெளியான செய்தி முற்றுமுழுதான பொய்யான வதந்தியாகும்.

இச்செய்தியை உருவாக்குவதற்காக தேசவிரோதக் குழுவினர் அம்பாறை மாந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து சாகாமம் என்ற இடத்தில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அடித்துத் தாக்கியதோடு அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

பின்பு அவர்கள் அக்கரைப்பற்றுக் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளார்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதோடு தமிழ் மக்களையும் துன்புறுத்தி வருகின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது<span style='font-size:25pt;line-height:100%'></span>

<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
Reply


Messages In This Thread
சிங்கள ஊடகங்களில் பொய்யான செய்தி - by மேகநாதன் - 01-14-2006, 09:24 AM
[No subject] - by Sukumaran - 01-14-2006, 04:43 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:29 PM
[No subject] - by Sukumaran - 01-16-2006, 11:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)