Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம்
#1
<b>செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் </b>
நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார்.
ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன.
இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவதற்கான ஹெலிகொப்டர் வசதிகளை வழங்குவது என்று அரச உயர்மட்டம் கொள்கை அளவில் தீர்மானித்திருப்பதாக நம்பகமாக அறியவந் திருக்கிறது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சியில் அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வேயின் விசேட தூது வரும், அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இவ் வருட முதல் வாரம் தொடக்கம் அடுத்த செவ் வாய்க்கிழமை வரை தமது குடும்பத்துடன் எகிப்தில் விடுமுறையைக் கழித்து வருகின் றார்.
விடுமுறையை முடித்துக் கொண்டு நோர் வேத் தலைநகர் ஒஸ்லோவுக்குத் திரும்பும் அவர்,எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
24 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவர் சந்திப்பார்.
அடுத்த நாள் அவர் கிளிநொச்சிக்குச் செல் கிறார். அங்கு அவர் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார்.
அங்கு புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை நேரடியாக சந்திப்பதற்கு சொல்ஹெய்ம் விரும்புகிறார் எனத் தெரிகின்றது. ஆனால், சொல்ஹெய்ம் வன்னி வரும் சமயத்தில் அங்கு புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பால சிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
அன்ரன் பாலசிங்கத்தின் பிரசன்னம் இல்லாமல் எரிக் சொல்ஹெய்மையோ அல் லது வேறு சர்வதேசத் தலைவர்களையோ தலைவர்பிரபாகரன் சந்திக்கமாட்டார் என்றும் தெரிகின்றது.
இச்சந்தர்ப்பத்திற்காக லண்டனிலிருந்து வன்னிக்குச் செல்வதற்கு மதியுரைஞர் பாலசிங்கம் தயார் என்றாலும் அதற்கான சூழ் நிலைகள், வசதிகள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர் லண்டனிலிருந்து புறப்படு வார் என்றும் கூறப்படுகின்றது.
முதலாவதாக அவரது பயணத்துக்கான பாதுகாப்பு உரிய சம்பந்தப்பட்ட தரப்புக ளால் அதற்கேயுரித்தான வழிமுறையில் உறு திப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பு சூழ்நிலை யும் நிலவ வேண்டும். மோசமான மோதல் கள், அழிவுகள், தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கொழும்பு ஊடாக அவர் வன்னிக்குச் செல்ல முயலமாட்டார் எனத் தெரிகிறது.
அடுத்ததாக, கட்டுநாயக்கா விமான நிலை யத்திலிருந்து வன்னி வரை தாமதமின்றிப் பயணம் செய்வதற்கு அவருக்கு ஹெலிகொப்டர் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அத்தகைய நிலைமை உறுதியானால்தான் அவரது வன்னி வருகை இடம்பெறும் என் கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
மதியுரைஞர் பாலசிங்கம் வன்னி செல்ல விரும்பினால்,கட்டுநõயக்கா விமான நிலை யத்திலிருந்து விசேட ஹெலிகொப்டர் வசதி அவருக்கு வழங்கலாம் என அரசுத் தலைமை கொள்கையளவில் நேற்று முன் தினம் மாலை முடிவு செய்திருப்பதாக நம்ப கமாக அறியவந்தது.
அரசுத் தலைமையின் இந்தத் தீர்மானத்தை, பாதுகாப்புச் சிக்கல்களைக் காரணம் காட்டி புறந்தள்ளாமல் செயற்படுத்தக் கூடிய விருப்ப நிலையில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப் புகள் தயாராக இருக்கின்றனவா என்பது இன்னும் தெரியவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் ஏதும் இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தரையி றங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலத்தில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும்,இராஜதந்திரிகளும் புலி களின் கிளிநொச்சித் தலைமையகத்துக்குச் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டிய தேவை எழுந்த போதெல்லாம் ஒன்றில் வவுனியா வரை அல்லது பலாலி வரை இலங்கை விமானப் படை வான்கலங்களில் சென்று அங்கிருந்து தரை மார்க்கமாகவே கிளிநொச்சிக்குச் சென்றனர்.
இந்தப் பின்னணியில் மதியுரைஞர் பால சிங்கத்தை ஏற்றிக் கொண்டு புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் ஹெலிகொப்டரை இறக்க விமானப்படை தயாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எது எப்படியென்றாலும் மதியுரைஞர் பாலசிங்கம் இப்போதைய சூழ்நிலையில் வன்னி வருவதனால் அது இலங்கையில் எரிக் சொல்ஹெய்ம் தங்கி நிற்கும் காலத்தை ஒட்டியதாக இருக்கும் என ஊகிக்க முடிகின்றது.
தனது உத்தேச வன்னிப்பயணம் குறித்து மதியுரைஞர் பாலசிங்கம் தீர்க்கமான முடிவு எதையும் இன்னும் எடுக்கவில்லை என்றும்
நிலைமையைப் பொறுத்து தலைவர் பிரபாகரனுடன் கலந்தாலோசித்து, அவரது வழி காட்டலுக்கு அமைய பாலசிங்கம் அடுத்த வாரமளவில் ஒரு முடிவை எடுக்கக் கூடும் என்றும் தெரியவருகின்றது.
இதனிடையே, 23ஆம் திகதி கொழும்பு வந்து, 25 ஆம் திகதி வன்னி சென்று, புலிகளின் தலைவர்களைச் சந்திக்கும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கையில் நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பி லிருந்து புறப்படமுன்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு தடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பார் எனத் தெரிகிறது.
அதற்கேற்றவகையில் அவரது நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிந் தது.
எரிக் சொல்ஹெய்ம் இம்முறை கொழும்பு வந்து திரும்புவதற்கு முன்னர் அரசு புலிகள் சமாதானப் பேச்சுக் குறித்தும், அது நடத்தப்படக் கூடிய இடம் குறித்தும் திட்டவட்ட மான ஒரு முடிவு எட்டப்பட்டுவிடும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் உறுதிதெரிவித்தன.

uthayan.com
இணைப்பு : : kugan
Sat, 14 Jan 2006, 06:10:32 GMT


http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் - by Vaanampaadi - 01-14-2006, 08:05 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 06:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:48 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 01:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:21 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:44 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 05:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)