01-08-2004, 09:18 PM
சமாதானம் தமிழ் மக்களுக்குத் தந்த சுகந்திரம் பற்றி வெளிநாட்டு மீடியாக்காரர்கள் நேரடியாகப் பேட்டி எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ வேண்டுமென்றால் அவர்கள் முகமாலைச் சோதனைச்சாவடிக்கு வரலாம்.
எந்த மனித உரிமை அமைப்பாவது இராணுவத்தின் மனித உரிமை பேணும் சமாதான காலச்செயற்பாடு பற்றி நேரில் தரிசிக்க ஆவலிருந்தால் அவர்களும் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடிக்கு வரலாம்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் யாராவது சிங்கள் அரசாங்கம் சமாதானத்தில் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வை, நம்பிக்கையை வளர்ப்பது பற்றி இராணுவத்திற்கு இடப்பட்டிருக்கும் கட்டளையை அறியவிரும்பின் அவர்களும் வரலாம் முகமாலைக்கு.
சோதனைச் சாவடியைக் கடப்பதற்கு அங்கு ஒரு ஒழுங்குமுறை இருகிறது, ஒரு ஏற்பாடு இருக்கிறது. மேற்சொன்னவர்களின் கண்களிற்குச் சிக்காது பிறிதொரு விசேட ஏற்பாடும் அந்த முகாலைச் சோதனைச் சாவடியில் இருக்கிறது. அது தமிழ் இளைஞர்கள் யுவதிகளிற்கும் சில சமயங்களில் வயது வந்தவர்களுக்கும் உரியதானது.
இந்த ஏற்பாடு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஏற்பாடு. இந்த மறைமுகச் சாவடிக்கு அவர்கள் யாரையெல்லாம் அழைக்கவிரும்புகின்றார்களோ அவர்கள் தனியாக அழைத்துச் செல்லப்படுவர். அதற்குக் காரணங்களோ நியாயங்களோ தேவையில்லை. தனது அடையாள அட்டையைக் காட்டி, தான் கொண்டுவரும் பொதிகளை, உடுப்புப் பைகளை அவிழ்த்துப் பரப்பி அவற்றையும் சோதனைக்காகக்காட்டி, கைகளை உயர்த்தி, தனது உடலைச் சோதனையிடவும்காட்டி மட்டும் சாவடியைக் கடந்து போய் பயணித்துவிட முடியாது.
அழைத்துச் செல்லப்படுபவர் எந்த நியாயங்களுமு; காரணங்களுமின்றி, காவல்துறையுமின்றி தனியாக விசாரிக்கப்படுவார். எங்கு போகிறாய்? எங்கிருந்து
வருகிறாய்? என்னவேலை செய்கிறாய்? எனத் தொடங்கும் விசாரணைகள் புலிகள் பற்றிக் கேட்பதாகி, நீ புலி என்று மிரட்டியாகி, புலிபற்றித் தகவல்களைத் தருகிறாயா? என்று வினாவி, விசாரணைக்கு அவர்களைத் திருப்பதிப்படுத்தக் தவறுபவர்களிடம் சொந்த முகவரியைவேண்டி உன்னைப் பிறகு பார்த்துக் கொள்கிறோம் என்று அனுப்பி வைக்கிறார்கள்.
ஒருநாளைக்குப் பயணிக்கும் இளைஞர்களில் பத்து வீதமானோர் இதற்குட்படுகின்றனர். தனித்தோ நண்பர்களுடனோ பயணிக்கும் இளைஞர்களில் எழுபது வீதமானோர் இதற்குட்படுத்தப்படுகின்றனர். தேவைப்படும் போது பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதற்குட்படும் பயணிகள் பயத்தினால் மிரண்டு போகின்றனர். முகவரியை கொடுத்துவிட்டு வரும் பலர் பீதியால் வீடுகளில் இருக்கமுடியாத நிலையும் யாழ்ப்பாணத்தில் உண்டு.
ஒருவரை பலர் சேர்ந்து விசாரிப்பதும் பயணியுடன் சேர்ந்து வருபவர்களை நீங்கள் போங்கள் அவருடன் கதைத்து விட்டு வருகிறோம். 'என்று கூறி அனுப்புவதும் இங்கு சகஜம்' இதனால் ஏற்படும் மனப் பீதியால் இளையவர்களும் பெற்றோரும் அடையும் மன உழைச்சலையோ, பாதுகாப்பின்மையையோ, நடமாடும் சுதந்திரத்தையோ மனித உரிமை அமைப்புகளென்று இயங்குபவர்கள் கருத்தில் கொள்வதாக இல்லை.
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இதுபற்றியெல்லாம் தெரியாதா? அல்லது இது பாராதிருப்பது குழப்பங்களைத் தவிர்ப்பதற்கான மார்க்கமென்று எண்ணுகின்றார்களா? அவர்களின் அலுவலகம் ஒன்று இருக்கவேண்டிய இடம் இங்கு தான். யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு தனது ஒரு செயலகத்தை வைத்திருக்கவேண்டிய இடம் இதுதான்.
இச்சாவடியில் புலிகளின் உறுப்பினர்கள் ஆயுதத்துடன் வந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டதுண்டு. பின்னர் அது தவறு என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதுமுண்டு.
போர் நிறுத்தத்தின் ஒரு தரப்பான புலிகளுக்கே இந்த நிலையென்றால் சாதாரண மக்களுக்கு.?
புலிகளுக்கு இத்தகைய நிலை ஏற்படும் பொழுது யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்து உடனடி நடவடிக்கையில் புலிகளால் இறங்கி விடமுடியும். பிரச்சினைக்குத் தீர்வுகாண பிரதமர் தொடக்கம் நோர்வே வரை அணுகவும் முடியும். அதற்கு முடியாவிட்டால் ஒப்பந்தத்தை இரத்துச்செய்து பதில் நடவடிக்கையில் இறங்கவும் முடியும். ஆனால் சாதாரண மக்களின் பாதுகாப்பிற்கு சுகந்திரத்திகு எந்த உத்தரவாதமும் இல்லாதிருக்கிறது.
நாளாத்தம் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது ஒருபுறம் அதன் பிரதி விளைவாக ஏனையோரும் பீதிகருதி தமது பயணிக்கும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களாயிருக்கின்றனர். பாதிக்கப்படுபவர்களின் உளத்தாக்கம் அதனால் ஏற்படும் தொழிற்தாக்கம், சிரமங்கள் என்பவை பற்றி யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.
மனித உரிமை ஆணைக்குழுவின் கண்களை இது உறுத்தாமல் இருப்பது ஏன்? சரி மீடியாக்கள் கூட இவ்விடையத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இதில் பொறுப்பில்லையென்று சொல்ல முடியுமா?
முடிவு வேண்டும்
நன்றி பிரவீன் ஈழநாதம்.