01-14-2006, 06:56 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு 16</b></span>
<i>(முகத்தார் வெளியில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தார் ஏதோ சத்தம் கேட்டு வெளியிலை வருகிறா பொண்ணம்மக்கா)</i>
பொண்ணம்மா : ஜயோ. . . ஏனப்பா பெடியனைப் போட்டு இப்பிடி அடிக்கிறீயள் போசன்ரை மனிசி இப்ப சண்டைக்கு வரப்போறாள்
முகத்தார் : பின்னை என்னடி இவன்ரை கேள்வியைக் கேட்டா அடிக்காம என்ன செய்யிறது?
பொண்ணம்மா : அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டுப் போட்டான்?
முகத்தார் : காந்திஜெயந்தி அக்டோபர் 2ம் திகதி வரும் எண்டு சொல்லிக் குடுக்கிறன் அதுக்கு இவன் கேக்கிறான் எனக்கு காந்தியைத் தெரியும் அது ஆர் ஜெயந்தி எண்டு . .
பொண்ணம்மா : சரி உங்களுக்கும் தெரியாட்டி புத்தகங்களிலை தேடி சொல்லிக் குடுக்கிறதை விட்டுட்டு பெடியனை போட்டு அடிக்கிறீயள்
முகத்தார் : அம்மா . . தாயே . .எங்கையோ போக வெளிக்கிட்டுட்டீர் போல கிடக்கு முதலிலை அந்த அலுவலைப் பாரும்
பொண்ணம்மா : பொங்கலுக்கு சாமான் வாங்க எண்டு கடைக்கு வெளிக்கிட்டனான் வாறன் போட்டு. . . .
<i>(பொண்ணம்மா போய் கொஞ்ச நேரத்திலை சாத்திரியார் வந்து சேருகிறார்)</i>
சாத்திரி : என்ன முகத்தான் பொங்கலும் நெருங்குது வீட்டிலை அமளியைக் காணேலை. . .
முகத்தார் : அட. .சாத்திரியே. . வா. . .அமளி இப்பதான் சா. . . மனுசி இப்பதான் பொங்கல் சாமான்கள் வாங்கவெண்டு கடைக்குப் போயிருக்கிறாள்
சாத்திரி : அப்ப இந்தமுறை தைப் பொங்கல் மாட்டுப்பொங்கல் எல்லாம் வலு விசேஷம் எண்டு சொல்லு. . .
முகத்தார் : நீ . . வேறை வீட்டிலை மாடே இல்லை பிறகு என்ன மாட்டுப் பொங்கல்
சாத்திரி : உந்த வெளிநாட்டிலை எங்கடை சனங்கள் மாடை வைச்சுக் கொண்டே பொங்கல் செய்யினம் புூட்டின வீட்டுக்கை அடுப்பிலை பொங்கலை செய்து போட்டு மனுசிக்கு. . . சா. . .குடும்பத்தோடை எல்லோ சாப்பிடுகினம்
முகத்தார் : வாய்க்கு ருசியா சாப்பிட வேணுமெண்டால் எந்த நாளும் பொங்கலை கொண்டாடலாம் கண்டியோ. . . .
<i>(வெளியிலை போண பொண்ணம்மாக்கா படலையை கோபத்திலை அடிச்சு சாத்திக் கொண்டு வாறது தெரியுது)</i>
சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா வாற வரத்து பிழையாக்கிடக்கு நான் வரட்டே
முகத்தான் : உன்ரை கெட்டகுணமே இதுதான் பொறுத்த நேரத்திலை விட்டுட்டு மாறியிடுவாய் கொஞ்ச நேரம் இரு எனக்கும் தெம்பாக் கிடக்கும்.
சாத்திரி : அதுக்கு இப்ப என்னத்துக்கு நீ கண்ணாடி எடுத்துப் போடுறாய்?
முகத்தார் : எனக்கு டாக்குத்தர் சொல்லியிருக்கிறார் தலைவலி வந்தா கண்ணாடியைப் போடச் சொல்லி.
சாத்திரி : என்ன முகத்தான் உள்ளுக்கை போண பொண்ணம்மாவின்ரை சத்தத்தை காணேலை ஒருக்கா குடிக்க தண்ணி கேக்கிற மாதிரி கூப்பிட்டு பாக்கட்டே?
<i>(சாத்திரியார் குடிக்க தண்ணி கேக்க கொண்டு வந்து குடுக்கிறா பொண்ணம்மா ஆனால் முகம் அழுது சிவந்திருப்பது தெரியுது)</i>
சாத்திரி : என்ன பிள்ளை முகமெல்லாம் வீங்கிக் கிடக்கு முகத்தானோடை எதாவது பிரச்சனையோ?
பொண்ணம்மா : அதுதான் எந்த நாளும் நடக்குதே பிறகென்ன புதிசா. . இது வேறை.
முகத்தார் : என்னப்பா போகேக்கை நல்லாத்தானே போனனீர் திடீரெண்டு வழியிலை எதாவது நடந்திச்சோ. .
பொண்ணம்மா : ஆ. . .எல்லாம் உங்கடை அருமைப்பிள்ளையும் மருமகளும் தான்
முகத்தார் : அவங்கள் எங்கையப்பா வெளியிலை எல்லோ இருக்குதுகள் இப்ப என்னத்துக்கு இதுக்கிலை அதுகளை இழுக்கிறீர்
பொண்ணம்மா : ம். .ம். . எனக்கு வேண்டுதல் பாருங்கோ. . அதுதான் இழுக்கிறன் கடைக்குப் போகேக்கை தம்பியனோடை ஒருக்கா கதைப்பம் எண்டுட்டு சீலன்ரை டெலிபோன் புூத்திலை போய் ஒரு கோல் எடுத்தன். . .
முகத்தார் : எங்கை லண்டனுக்கோ?
பொண்ணம்மா : வேறை எங்கை. . உங்கடை மருமகள்காரி சொல்லுறாள் அவர் நல்ல நித்திரையாக்கிடக்கிறார் டிஸ்ரெப் பண்ணாமல் பிறகு எடுங்கோ எண்டு. . .
முகத்தார் : அதிலை என்ன பிழையம்மா. . தம்பியன் வேலையாலை வந்து கழச்சுப் போய் படுத்திருப்பன் ஏன் குழப்புவான் எண்டு பிள்ளை நினைச்சிருக்கும்
பொண்ணம்மா : நல்லா பிள்ளை நினைப்பாள் என்ரை குரலைக் கேட்டவுடனையே அவளுக்கு மூளை வேலை செய்திருக்கும் எப்பிடி கட் பண்ணுறதெண்டு தம்பியன் முழிச்சிருந்தாலும் நித்திரை எண்டுதான் சொல்லுவாள் இது எனக்கு தெரியும்
சாத்திரி : பிள்ளை உங்கடை குடும்ப விசயம் இருந்தாலும் கேக்கிறன் ஏன் இப்பிடி வீட்டு;க்கு வந்த மருமகளோடை பிரச்சனை பண்ணுறீயள் இது படங்களிலை வாற மாதிரிஎல்லோ கிடக்கு. . .
பொண்ணம்மா : சாத்திரியண்ணை இஞ்சை இருக்கும் மட்டும் மாமி. . மாமி . . எண்டு உருகினவள்தான் எப்ப லண்டனுக்கு போனாளோ அதுக்குப்பிறகு துப்பரவா மாறியிட்டாள் இப்ப என்னையும் என்ரை பிள்ளையையும் பிரிக்கப் பாக்கிறாள்
முகத்தார் : இஞ்சரப்பா சும்மா அந்தப்பிள்ளேலை பழியைப் போடாதையும் ஏதோ நான் பாத்த குறிப்புகள் சரியில்லை எண்டு நீhதானே தேடிப் பிடிச்சனீர் பிறகு எதுக்கு துள்ளிக் குதிக்கிறீர்
பொண்ணம்மா : ஆருக்குத் தெரியும் இப்பிடி நசுவல் கள்ளியா இருப்பாள் எண்டு .இப்ப என்ன நான் அவையோடை போய் இருக்கப் போற தெண்டு கேட்டனானே. . .?
முகத்தார் : அட.. .இந்த ஜடியா வேறை இருக்குதோ. . .இஞ்சை பாரும் நீர் கலியாணம் கட்டி வந்து என்ரை அம்மாவோடை எப்பிடி இருந்தனீர் எண்டதை நினைவிலை வைச்சுக் கதையும். .
பொண்ணம்மா : ஜயோ. . அது வேறையப்பா உங்கடையம்மா ஆக்களுக்கை என்ன கதைக்கிறதெண்டு தெரியாம கதைச்சு என்ரை மானத்தை வாங்கிறபடியாலைதான் பேசுறனான் உங்களையும் அம்மாவையும் எப்பவாவது பிரிச்சிருப்பனா. . .?
முகத்தார் : சரியப்பா நீர் நல்ல மனுசிதான் 25வருஷம் பெடியனை வளர்த்து ஆளாக்கிப் போட்டீர் இனி அந்தப் பொறுப்புகளை அந்த பிள்ளேட்டை விட்டுட்டு நிம்மதியா இருமன்
பொண்ணம்மா : இது நல்ல கதையாக்கிடக்கு 25 வருஷமும் அவனை வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன் இந்த இயக்கங்களுக்கையும் ஆமிக்கையும் பாதுகாத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட இடையிலை வந்த அவ தட்டிக் கொண்டு போகப் பாக்கிறா. . . .விடுவனா. . .
சாத்திரி : பிள்ளை நீ மட்டுமில்லை பெடியனை பெத்த கன தாய்மார் வீட்டுக்கு வாற மருமகளை ஒரு வித்தியாசமாத்தான் பாக்கினம் ஏன்தான் தங்கடை வீட்டு மகள் மாதிரி பாக்கினமில்லையோ தெரியலை. .
முகத்தார் : இதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை தாய் தேப்பனை விட்டுட்டு புருஷன்தான் எல்லாம் எண்டு வாற பிள்ளை பெடியனிலை கொஞ்சம் உரிமை எடுத்துக்கிறதிலை பிழையில்லைதானே. . .
சாத்திரி : இனி எங்களுக்கும் வயசு போட்டுது வாழுற பிள்ளைகள் எண்டு இந்த தாய்மார் ஒதுங்கினாத்தான் என்ன எண்டு கேக்கிறன். .
பொண்ணம்மா : இஞ்சை எனக்கு அவளோடை போட்டியுமில்லை பொறாமையுமில்லை என்ரை பிள்ளையை முந்தினமாதிரி கதைக்ககூட விடுகிறாள் இல்லையே அதுதான் கவலையாக்கிடக்கு. . .
சாத்திரி : பிள்ளை இஞ்சத்தைய மாதிரியில்லை வெளிநாட்டு வாழ்க்கை 2 3 வேலைக்கு போறது வீட்டுக்கு வந்தால் அலுப்பு இனி கலியாணம் முடிஞ்சபடியாலை மனுசியை வேறை வெளியிலை எங்கையன் கூட்டிட்டு போக வேணும் எங்கை பெடியனுக்கு கோல் எடுக்க நேரம். . . .
முகத்தார் : அம்மா. . ராசாத்தி டெலிபோனிலை எப்ப அவன் கதைச்சாலும் உன்ரை ஒப்பாரியைத்தான் சொல்லுறனீர்; இதுக்கை காசு அனுப்பாட்டிக்கு கிழிஞ்சுது ஏன் கோல் எடுத்து திட்டு வேண்டுவான் எண்டுட்டு தம்பியன் எடுக்காம இருக்கலாம்
பொண்ணம்மா : என்னவோ உங்களுக்கு மருமகளை குறைச்சு கதைச்சா பிடிக்காதே ஏதோ தலையிலை தூக்கி வைச்சு ஆடுங்கோ. . எனக்கு வேலையிருக்கு போறன். .
சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா நல்லாத்தான் கவலைப்படுது நீயாவது மகனோடை கதைக்கேக்கை சொல்லலாம்தானே மாதத்திலை 2தரமெண்டாலும் கோல் எடுத்து கொம்மாவோடை கதைக்கச் சொல்லி வீணா அந்த பிள்ளைக்கெல்லோ கெட்டபேர் வருகுது. . . .
முகத்தார் : இவளிலை பிழையில்லையடா. . .பின்னேரமானா பக்கத்திகூட்டங்கள் கொஞ்சம் கதைக்கவெண்டு வாறது வந்து இவளை உசுப்பேத்தி விட்டுட்டுப் போறது அதை நிப்பாட்டினா சரி . . வரட்டும் இண்டைக்கு நாயை அவிட்டு விடுறன் அப்ப தெரியும். . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>