Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோக்குகள், 2006
#2
இன, மத, மொழி பேதங்களை மறந்து ஒற்றுமையாகக் கைகோர்த்துச் செயற்படுவ தன் மூலம் நிரந்தர சமாதானத்தை உருவாக்க முடியும்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென ரல் சரத் பொன்சேகா விடுத்திருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
பலாலி படைத்தலைமையகம் இந்த வாழ்த்துச் செய்தியை நேற்றிரவு ஊடகங்க ளுக்கு அனுப்பிவைத்தது.
இராணுவத் தளபதியின் செய்தியில்
மலர்ந்துள்ள 2006ஆம் ஆண்டின் ஆரம் பத்திலேயே உலகமெங்கும் பரந்துவாழும் இந்து மக்கள் மிகவும் பயபக்தியுடன் அனுஷ் டிக்கும் தைப்பொங்கல் தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துச் செய்தியொன் றைத் தெரிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இனம், மதம், மொழி ஆகியவற்றினால் வேறு பட்டிருந்தாலும் கூட எங்கள் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் ஒன்றா கும். இன்று நீங்கள் அனுஷ்டிக்கும் சூரியபக வான் எங்களுக்கும் மிக முக்கியமானதா கும். அவ்வாறே ஒரே சூரிய ஒளியின் கீழ் வாழும் நமக்கும் அவரது பார்வையும் அரு ளும் ஒரேவிதத்தில்தான் கிடைக்கின்றன. எனவே, நம்மில் எவ்வித வேற்றுமைகளும் இருக்கக்கூடாது. இவ்வாறான முக்கியமான தினத்தில் நாம் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி பேதங்களை மறந்து ஒற்றுமையாகக் கைகோர்த்து சேர்ந்து வாழ்வதன் மூலம் இலங்கை வாசிகளான நாம் நிரந்தர சமாதானத்தை உருவாக்கமுடி யும். இதற்காக நாம் அனைவரும் இந்தத் தினத்தில் பிரார்த்தனை செய்வோம்.
உங்களது எதிர்கால வாழ்வில் சகல எதிர் பார்ப்புகளும் நிறைவேறி சாந்தியும், சமாதா னத்துடனும், சௌபாக்கியத்துடனும் வாழ வும், கமத்தொழில் வெற்றிகரமாக அமைய வும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

---------------
www.uthayan.com
enrum anpudan
Reply


Messages In This Thread
[No subject] - by sooriyamuhi - 01-14-2006, 05:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)