01-14-2006, 01:46 AM
<b>திரு.குருவிகள்:</b>
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><b>தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது...! </b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<span style='color:green'>தமிழர்களின் பெருந்தனமையால் தான் முச்சங்கம், மூவேந்தர், மூப்பெருநாட்டுடன் வாழ்ந்தும் முடிவில் நாதியற்று நாடு நாடாக அலைய வைத்தது என்பது பலரினதும் கருத்து. தமிழர்கள் தங்களுகுரியவற்றையே சொந்தம் கொண்டாடத் தயங்கி, வந்தாரை வாழ வைக்கும் நாடென்று வசனம் பேசுபவர்கள்.
திரு. குருவி அவர்களே, நீங்கள் இணையத் தளத்தின் அனுபவம் வாய்ந்த அங்கத்தவர், உங்களின் கருத்துக்களிலிருந்து நீங்கள் அறிவில் முதிர்ந்தவர் போல் தெரிகிறது. இப்படியான நளினங்களை விட்டு விட்டு, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் தான் வாங்கினார்கள், அது அவர்களுடையதல்ல, இப்பொழுது தமிழர்களுடையதென்று \"சாதிக்கிறார்கள்\" என்பதை நிரூபிக்க நீங்கள் உங்கள் பக்க ஆதாரங்களைத் தெரிவித்தால், என்னைப் போன்றவர்களுக்கு அறிவூட்டுவதாக அமையுமல்லவா?
செல்வி.ரேணுகா குமாரசாமி அவர்களாளால் www.sangam.org இல் The Tamil Roots of Bharatha Natyam (Sathir) என்ற கட்டுரையை வாசித்த பின்பு தான், பரதநாட்டியம் இன்று சமஸ்கிருத மயமாக்கப் பட்ட தமிழரின் கலையென்பதையும், வடமொழியில் நாட்டிய சாஸ்திரம் எழுதப்பட நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் தமிழரின் எல்லா நாட்டிய வகைகளையும் சிறப்பாக விவரிக்கப் பட்டுள்ளதாகவும், தமிழறிஞர் வி.கல்யாணசுந்தரமும், மறைமலையடிகளும், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்றவர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம் , பதம் , தில்லானா போன்ற பதங்களுக்கு இணையான தமிழ்ச்சொல்களையும் அதன் தமிழ் Etymology ஐயும் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார்களாம்.
யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவில் பரதக்கலையும் ஒரு பாடமாக இருப்பதாக இங்கு ஒருவர் சொன்னதாக நினைவு. யாராவது யாழ் பல்கலைக்கழகததைச் சேர்ந்தவர்கள் இந்த இணையத் தளத்தில் அங்கத்தவராக இருந்தால் அங்குள்ள புத்தகங்களைத் தேடிப் பார்க்கலாம். இந்த சதிர் என்ற தமிழரின் பரதக்கலையை வளர்த்தவர்கள் நட்டுவனார்கள் எனப்படும் இசைவேளாள வகுப்பைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு நாடுகளில் கூட கடந்த இரண்டு நூற்றாண்டு முன்பு இலத்தீன் மொழியில் தான் கலை, சட்டம், சங்கீதம், மருத்துவம் எல்லாம் எழுதப்பட்டிருந்தன ஆங்லிலத்தில் அல்ல. இலத்தீனில் தான் சட்டங்கள் எழுதப்பட்டன, எந்தவொரு விஞ்ஞான, கலை சம்பந்தமான பதங்கள் எல்லாவற்றுக்கும் இலத்தீன் மொழி தான் பாவிக்கப்பட்டது. அதே போல் தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதம் மொழியின் அந்தஸ்தும் அன்று இருந்தது. இரண்டும் இறந்த மொழிகளாக இருந்தும் கலை, விஞ்ஞான, சட்டங்களில் சமஸ்கிருதம் பாவிக்கப் பட்டது. அதே போல் தான் பரதநாட்டியத்திலும் சமஸ்கிருதம் நன்றாகக் கலக்கப்பட்டது.
<b>நான் சொல்ல வருவதெல்லாம் எத்தனையோ தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பரதநாட்டியத்தில் உயிரும், வேர்களும் தமிழரிடம் தான் உள்ளதென்பதை நிரூபித்துள்ளார்கள். Bharata Natyam - Classical Dance of the Ancient Tamils என்று பல அறிஞர்கள் சொல்லும் போது , நீங்கள் மட்டும், இந்த \"பரதநாட்டியம் தமிழருடையாதா அல்லது இரவல் வாங்கியதா\" என்ற தலைப்பின் கீழ் வந்து இப்படி \"தமிழர்கள் பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை கலப்பில்லாமல் உள்வாங்கிக் கொள்வதில் தப்பில்லை..! ஆனால் உள்வாங்கிய பின் அது தமிழர்களது என்று சாதிக்க நினைக்கக் கூடாது.\" என்று புத்திமதி சொல்வதின் அர்த்தம் என்ன? உங்களால் பரதநாட்டியம் தமிழருடையதல்ல, மற்றவர்களிடமிருந்து உள்வாங்கியது தானென்று நிரூபிக்க ஆதாரம் உண்டா? தயவு செய்து பதிவு செய்தீர்களென்றால் மிகவும் பயனுள்ளதாக அமையும். </b>
நன்றி
[size=10](The link for the Tamil Roots of Bharatha Natyam (sathir) article.)</span>
http://www.sangam.org/articles/view/?id=22