01-13-2006, 03:32 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/13/front.jpg' border='0' alt='user posted image'>
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மீது அரச படையினர் மேற்கொண்டுவரும் கைது, விசாரணை. கெடுபிடி என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக ஊழியர் தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
`அடக்காதே அடக்காதே ஊடக சுதந்திரத்தை அடக்காதே', `அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே', `அரசபடை அராஜகத்திற்கு அரசே பதில் சொல்', `வேண்டாம் வேண்டாம் மீண்டுமொரு தடவை ஊடக சுதந்திர இருட்டடிப்பு', அவசரகாலச் சட்டம் மூலம்தமிழ் ஊடகத்துறையை அடக்க முயலாதே' போன்ற பாதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர்.
அரச தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை காண்பித்தபோதும் அதனை உதாசீனம் செய்து தமிழ் ஊடகவியலாளர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டமை மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை புகைப்படமெடுத்து பிரசுரித்தமை தொடர்பாக இரு தமிழ்ப் பத்திரிகைகளின் அலுவலகங்களுக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டமை உட்பட அதிகரித்துள்ள கெடுபிடிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தே தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி ந.குமரகுருபரன், செயலாளர் சட்டத்தரணி த. ஜெயரட்ணராஜா, மாநகர சபை உறுப்பினர் ஆர். ராஜேந்திரன், கொழும்பு அமைப்பாளர் எஸ். முரளிதரன், புதிய இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர் நடராஜா ஜனகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
`ஊடக சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்காதே'; ஊடகவியலாளர் அணி திரண்டு ஆர்ப்பாட்டம்

- தினக்குரல்</span>