01-13-2006, 03:28 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>மல்லிகைத் தீவில் பலியான 2 தமிழரின் சடலங்களை ஐ.சி.ஆர்.சி. ஊடாக ஒப்படைக்க நீதிவான் பணிப்பு </b>
மூதூர்-மல்லிகைத் தீவில் நடந்த படையினருடனான மோதல் சம்பவம் ஒன்றில் பலியான இரு தமிழர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் ஊடாக, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மூதூர் பொலிஸாருக்கு மூதூர் நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார். இவ்விரு சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மூதூர் பிரதிநிதிகளால் அடையாளங் காணப்பட்டன. கடந்த புதன்கிழமை மூதூர் பொலிஸார் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையிலே மூதூர் நீதிவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்ததுடன் இது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்துக்கு உடனடியாகச் சமர்ப்பிக்கும்படியும் மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கொல்லப்பட்ட இரு தமிழர்களும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றும் படையினர் தெரிவித்திருந்தனர்.</span>
www.nitharsanam.com

"
"
"