01-13-2006, 03:25 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>விசாரணைக்கு செல்லமுடியாமல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் படுகொலையுண்ட மாணவரின் பெற்றோர் </b>
திருகோணமலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களதும் பெற்றோர், நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்ல முடியாதளவுக்கு கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லையேல் குடும்பத்துடன் அழித்து விடுவோமெனத் தினமும் பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மிரட்டல் காரணமாக ஏற்கனவே, இரு மாணவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான விசாரணைகளுக்குச் செல்லவில்லை. இனியும் தாங்கள் செல்லப் போவதில்லையெனவும் அவர்கள் கூறியுள்ளனர். கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் மட்டுமல்லாது இந்த நீதி விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை எதுவுமில்லையென்றும் ஏற்கனவே நடைபெற்ற பல படுகொலைகளின் போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைத் தாங்கள் அறிவோமெனவும் கூறியுள்ளனர். இதேநேரம் முதல் நாள் விசாரணைக்காக திருகோணமலை நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு, தினமும் பத்திற்கும் மேற்பட்ட தடவை சிங்களத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் தொடர்ந்தும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாகவும் வெளியே எங்கும் செல்வதில்லையெனவும், கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக கூடச் செல்ல முடியாத நிலையில் தாங்களிருப்பதாகவும் பெற்றோர் கூறினர்.
இதேநேரம், இந்தப் படுகொலை விசாரணையை தொடர்வதற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராயிருப்பதாகவும் அச்சமின்றி இவர்கள் விசாரணைகளுக்கு சென்று படையினரின் இந்த அட்டூழியத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. </span>
www.nitharsanam.com

"
"
"