01-12-2006, 05:53 PM
அருவி Wrote:kurukaalapoovan Wrote:அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.
குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?
அது ஒரு கலாச்சாரமோ? கண்டவனும் கண்டவளும் ஏதே எல்லாம் கண்ட கண்ட இடத்திலை செய்யினம். கண்டதையும் தின்னுதுகள் குடிக்குதுகள். நினைச்சாலே ஏதோ எல்லாம் செய்து. எங்கடை கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் மாதிரி வருமே. அடக்க ஒடுக்கமா பயபக்தியா இருந்தம் நாங்கள்.
அரைகுறை உடுப்பும் சென்ரும் பூசிக் கொண்டு 4 சொல்லு இங்கிலீசோ வேறை ஜரோப்பிய மொழிகளில் கதைச்சுக் கொண்டு எம்எஸ்என் இலை சட் பண்ணினா உங்களுக்கு நினைப்பு கல்வியறிவு வந்துட்டுது சமூகத்தையும் திருத்த முடியும் எண்டு என்ன? பெரியவர்கள் எல்லாம் சரியா செய்யாமல் தான் உங்களை பெத்து வழத்து ஆளாக்கி கொண்டு உந்த நிலையிலை விட்டிருக்கினம் நீங்கள் கேள்வி கேக்கிற அளவுக்கு என்ன?

