Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன்
#1
<b><span style='font-size:30pt;line-height:100%'>விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன்</span>

[b][வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 07:36 ஈழம்] [ச.விமலராஜா</b>]


<b>தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை 'அல்கைதா மன நிலையில்' அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ன் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.


இது தொடர்பில் பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் அளித்த நேர்காணல்:

விடுதலைப் புலிகள் வன்முறைக்குத் தயாராவதாக அமெரிக்க தூதுவர் ஜெஃரி லான்ஸ்ரெட் கூறியுள்ளார். வன்முறை என்பது ஒரு பக்கத்திலிருந்து உருவாவது அல்ல.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை அல்கைதா மன நிலையில் அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது. விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வந்தாலும் அதை சிறிலங்கா அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மீளக் குடியேற்றம் தொடர்பாக எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்களில் விடுதலைப் புலிகள் பங்கேற்ற போதும் அது நடக்கவில்லை. ஆகக் குறைந்தபட்சம் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கூட சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுகளுக்கான இடம் குறித்து சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்றார் இரா.சம்பந்தன்</b>


நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன் - by வினித் - 01-12-2006, 05:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)