01-12-2006, 02:58 PM
மோகன் Wrote:<b>Luckyluke</b> மற்றும் <b>rajathiraja</b> ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.
பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
ராஜாதி ராஜா - லக் லுக் ஆகியோர் விடயத்தில் (மோகன்) நீங்களும் ஏனைய மட்டுறுத்துனர்களும் எடுத்த முடிவுக்கு நன்றி.
இங்கே ஒரே பெயரில் வரும் பலர் செய்த விசமங்களால்
இப்படியான ஒரு நிலையை யாழ் களம் எடுத்ததை நான் அறிவேன்.
ஒரு சிலர் செய்யும் செயல்களே இந் நிலைக்கு காரணம்.
எனவே கருத்தாளர்கள் தங்கள் நிலை உணர்ந்து செயல்பட்டால் மட்டுறுத்துனர்கள் கண்ணில் எண்ணை தடவிக் கொண்டு களத்துக்குள் இருக்க வேண்டியிராது.
அது யாழ் களத்தை மட்டுமல்ல
அனைவரையும் உயர்வாக மதிக்க வழி வகுக்கும்.
மீண்டும் நன்றிகள்.
வசம்புவுக்கும்..............(நல்லதொரு ஆலோசனையை முன் வைத்தீர்கள்)
ராஜாதி ராஜா - லக் லுக் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

