Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
8 கடற்படையினர் கொலை
#4
2 ஆம் இணைப்பு) செட்டிக்குளத்தில் கண்ணிவெடியில் சிக்கி 10 சிறிலங்கா கடற்படையினர் பலி: 9 பேர் படுகாயம்!!
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 16:42 ஈழம்] [வவுனியா நிருபர்]
வவுனியா செட்டிக்குளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4.20 மணிக்கு கிளைமோர் கண்ணிவெடியில் சிக்கி 10 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 9 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.


மன்னார் - மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்துக்கும் அடம்பன்குளத்துக்கும் இடையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அனுராதபுரம் கடற்படை முகாமிலிருந்து வியாழக்கிழமை மாலை மன்னாருக்கு விடுமுறையில் திரும்பிய கற்படையினரை இராணுவ வாகனத்தில் அழைத்துச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




வவுனியா நகரிலிருந்து தென்மேற்கில் 24 கிலோ மீற்றரில் செட்டிக்குளம் உள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட மன்னார் - மதவாச்சி வீதியானது மன்னாருக்கான பிரதான விநியோகப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலை சிறிலங்கா கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த படையினர் செட்டிக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலையடுத்து மேலதிக படையினர் செட்டிக்குளம் பகுதியில் குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இத்தகைய கிளைமோர்த் தாக்குதல்களில் சிக்கி மொத்தம் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:17 PM
[No subject] - by Sriramanan - 01-12-2006, 12:31 PM
[No subject] - by Vaanampaadi - 01-12-2006, 01:04 PM
[No subject] - by Vaanampaadi - 01-12-2006, 06:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)