01-12-2006, 12:24 PM
<b>படையினர் மீது தாக்குல்: 4 படையினர் காயம் - படையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 6 பொதுமக்கள் படுகாயம்</b>
யாழ்ப்பாணத்தின் பரமேஸ்வரா சந்தி மற்றும் தட்டாதெரு சந்தி என்பற்றில் உள்ள படையினரின் சோதனைச் சாவடிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதல்களில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து படையினர் மேற்கொண்ட கண்மூடித்தமனான துப்பாக்கிச் சூட்டில் ஆறு பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை 11.00 மணியளவில் பலாலி வீதியில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள இராணுவ மற்றும் காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது அடையாளம் தெரியாத நபர்களி;னால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்த படையினர் கண்மூடித்தமாக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன், வீதியால் சென்றோரையும் கடுமையாகத் தக்கியுள்ளனர். படையினரின் துப்பாக்கிச் சூடுகள் பட்டு பொதுமக்கள் ஐவர் படுகாயடைந்தனர். கொக்குவிலைச் சேர்ந்த பரமேஸ்வரி சுகந்தினி(28), காரைநகரைச் சேர்ந்த விசுவநாதர் கதிர்காமலிங்கம், முருகேசு சந்தரலிங்கம், தர்மலிங்கம் ராஜகுமார் (16) மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த குட்டித்தம்பி கனகரட்ணம் (65), ஆகியோரே இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து யாழ். அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் நடைபெற்று 15 நிமிடங்களில் தட்டாதெருச் சந்தியில் உள்ள காவலரண் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒரு படையினன் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 71 அகவையுடைய சச்சிதானந்தன் என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளர். இவர் தற்போது யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"