Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை ராணுவம் அட்டூழியம்
#7
<b>யாழ். பாலியல் வல்லுறவு, படுகொலைகளுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே காரணம்: பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு </b>
[வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 14:12 ஈழம்] [தாயக செய்தியாளர்]
தென்மராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் படுகொலைச் சம்பவங்களுக்கு சிறிலங்கா புலனாய்வுத்துறையினரே பிராதான காரணமாக விளங்குவதாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

கச்சாய்ப் பகுதியிலுள்ள சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் இப்பிரதேச கட்டளை அதிகாரியாக பணியாற்றும் பண்டார என்ற புனைப்பெயருடன் செயற்பட்டு வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியின் கீழ் பதினைந்துக்கும் மேற்பட்ட புலனாய்வுத்துறையினரே பொதுமக்கள் மீதான படுகொலைச் செயற்பாட்டிலும் அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

யாழ். குடாநாட்டில் பெண்கள், யுவதிகள், மாணவிகள் மீதான படையினரின் வக்கிரமான துன்புறுத்தல்கள் பகிடிவதைகள்இ பாலியல் சேட்டைகளில் படையினர் மீண்டும் அதிகளவில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக யாழ். குடாநாட்டு மாதர் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் குற்றஞ் சுமத்தியுள்ளன.

குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு ஆபாசப்படங்கள் காண்பித்தல், மிகவும் கீழத்தரமாக ஆபசாமாக உரையாடுதல், சோதனை என்ற பெயரால் அங்க சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளினால் படையினரின் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தற்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மாதர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ். குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து தீவுப் பகுதிகளுக்கு தமது தேவைகளுக்காகவும் உறவுகளைச் சந்திப்பதற்கும் புதிதாக செல்வோர் அந்தந்தப் பகுதியிலுள்ள கடற்படை தொடர்பகத்தில் தமது விவரங்களையும் தங்கியுள்ள நாட்கள், காரணம் முதலானவற்றை தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகையப் பதிவுகளை மேற்கொள்ளாமல் இங்கு வருவோர், தங்கியிருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் அறிவுறுத்தியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே குறிக்கட்டுவான் துறைமுகத்தில் பொதுமக்கள் மீதான சோதனைக் கெடுபிடிகளைப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 01-12-2006, 10:55 AM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 11:00 AM
[No subject] - by Thala - 01-12-2006, 11:22 AM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 11:28 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:00 PM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:20 PM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)