01-12-2006, 10:46 AM
AJeevan Wrote:காசு மட்டும் இருந்து போதாது ராசா
ஊரில மாதிரி யார் வந்தாலும் ஒரு செம்பு தண்ணியாவது கொடுக்கிறவங்கள லண்டன் தவிர்ந்த ஐரோப்பாவிலதான் நான் பார்த்தேன்.
<b>ஆகக் குறைந்தது ஒரு இலவச சிரிப்பு</b>.......... :oops:
பாவம் அவங்களுக்கு உண்மையிலயே நேரமில்லை.
அவங்க வாழ்கை நிலை அப்படி?
பெற்றோல் நிலையமில்லை.
புலம் பெயர் வானோலி தொலைக் காட்சி விளம்பரங்களை பாருங்க.
யாருடைய விளம்பரங்கள் மூலம் இவை ஓடுதெண்டு?
உண்மை தெரியும்.
ஆரம்ப தமிழர்கள் சுவிஸுக்கு வந்த நேரம்
யாரும் படிக்க இல்ல.
<b>இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று
சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.</b>
<b>உண்மையான கடும் உழைப்பாளிகள்
குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று
வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.</b>
முன்ன கறுப்பா பார்த்தவங்க
இன்றைக்கு தமக்குள் ஒருவனா பார்க்கிற நிலை.
இன்றைக்கு அதிக சுவிஸ் குடியுரிமை பெறும்
வேற்று இனம் இலங்கையர் என்பது பெருமை.
எந்த ஒரு வெள்ளைக் குழந்தையும்
தன் நண்பர்கள் தமிழ் குழந்தைகள் என்று
சொல்லிப் பெருமைப்படுவதைப் பார்ப்பதில்
எமக்கே பெருமை.
சுவிஸ்காரர்கள் தமிழரைப் பார்த்ததும்
வணக்கம்.
எப்படி சுகம்?
நல்ல சுகம். என்று ஓரிரு வார்த்தைகளையாவது பேசுவது
அவர்கள் மேல் உள்ள பாசத்தினால்தான்.
தமிழரோடு போகும் சுவிஸ் குழந்தைகளுக்கு
நிச்சயம் பாதுகாப்பு இருக்கு என்று இந்த மக்கள்
நம்புவது பல வேளை என்னையே வியப்பில் ஆழ்த்தியவை!
விடுதலைப் புலிகளை தடை செய்ய நெருக்குதல்கள் வந்த போது
அதை நிராகரித்தது சுவிஸ் போலீஸ் திணைக்களம்தான்.
அவர்களால் எமக்கு ஆபத்து இல்லை.
போலீஸ் பந்தோபஸ்து கூட இல்லாமல்
அமைதி காப்பவர்கள் என்ற கருத்து.............
சில உதைபந்தாட்ட நிகழ்வுகளில்
சில வன்முறைகள் நடைபெறுவது வருத்தமானது.
இதுகூட சாட்சி சொல்லாத காரணத்தால் தொடர்கிறது.
இது வெகு காலம் தொடராது..................
ஒன்று ரெண்டு அப்பிடி இப்பிடித் துள்ளும்...........
முறையான தகவலோட
மாட்டினா உள்ள இல்லாட்டி வெளிய
எது வசதியோ அவங்க தீர்மாணிக்க வேண்டிய விடயம்?
லண்டன் காட் கொண்டு வந்து பெற்றோல் அடிச்சவங்க
சாமான் வாங்கினவங்க
சிலர் இன்னும் பத்திரமா உள்ள இருக்கிறாங்க.
சிலர் எதுக்கு பாதுகாப்பா இருக்க வேணுமெண்டு
கனடா - லண்டன் பக்கம் ஓடிட்டாங்க?
ஐரோப்பாவோட சுவிஸ் இணைஞ்சா
அவங்களுக்கு ஆப்பு இருக்காம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒன்று மட்டும் நிச்சயம்
நாளைய உலக வரலாற்றில்
<b>தாம் வாழும் நாட்டு மக்களுடன் சரிசமமாக இணைந்து ஈகோஎன்பது
என்னவென்று தெரியாது
முன்னேறி நிற்கப் போவது என்னவோ
இங்கிலாந்து தவிர்ந்த
ஐரோப்பிய - ஸ்கண்டிநேவிய தமிழரது குழந்தைகள்தான்</b>
ஆனால் ஒன்று இவர்கள் தம்மை தமிழர் என்று சொல்லாமல்
இந்த நாட்டு மக்களாக தம்மை ஆக்கிக் கொள்வார்கள் :?: :oops:
அஜீவன் இங்கு ஜேர்மனியிலும் இதே மாதிரித்தான் நன்றி எடுத்து கூறியதற்கு.
" "

