01-12-2006, 10:17 AM
தமிழ்ப் பெண்கள் கற்பழிப்பு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை
ஜனவரி 12, 2006
ராமேஸ்வரம்:
இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர்.
24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர்.
அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்தடைந்தனர். அவர்களை சோதனைச் சாவடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது இலங்கை ராணுவம் தங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்து வருவதாகவும். பெண்களை கற்பழித்து வருவதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தட்ஸ்தமிழ்

,
......
......