Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிலைமை மேலும் மோசமடைந்தால் கண்காணிப்புப் பணி கைவிடப்படும்
#1
<b>நிலைமை மேலும் மோசமடைந்தால்
கண்காணிப்புப் பணி கைவிடப்படும்
கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்லன்ட் எச்சரிக்கை</b>



நிலைமை மேலும் மோசமடைந் தால் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கைவிட நேரிடும்.
இவ்வாறு எச்சரித்துள்ளார் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ருப் ஹொக்லன்ட்.
"ரொய்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வடக்கிலிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களில் அநேகர் தங்களின் இடங்களில் இருந்து வெளியேறி வருகின்ற னர். கடந்த டிசெம்பர் மாதம் முதல் நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் பின்னால் இருப்பவர்கள் பொதுமக்கள் மீதே தாங்கள் பாதிப்பினை ஏற்படுத்துகிறோம் என்பதை உணர வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே.
சமாதான முயற்சிகளில் ஈடுபாட்டுடன் இருப்பதாக இருசாராரும் கூறினாலும் அவர்களால் பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது.
சுமார் ஆயிரம் பேரளவில் பாது காப்புத் தேடி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத் உடன்படிக்கையை மீறி இராணுவத்தின் ஊடுருவல் பிரிவு தங்களின் பகுதியில் ஊடுருவியிருப்பதாகவும் கிழக்கில் தங்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 3 பகுதிகளிலிருந்து தங்களின் சோதனைச் சாவடி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தாம் திரும்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்தியோர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவிக்கிறது. ஆனால், அவர்கள் இராணுவத்தின் பராமரிப்பில் இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.
வார இறுதியில் கடற்படையினரின் டோராப் படகின் மீதான தாக்குதல்கள் மற்றும் தொடர்ச்சியான கண்ணிவெடித் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் மறுப்பினை சில இராஜதந்திரிகள் அல்லது ஆய்வாளர்கள் நம்பு கின்றனர்.
ஆத்திரமடைந்துள்ள பொதுமக்களே இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு எனக் கூறுவதற்கான சரியான தகவல்கள் எங்களிடம் இல்லை. ஆனால், தாக்குதல்களைப் பார்க்கையில் தாக்குதல்களை நடத்தியவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிகிறது.
அண்மைய தாக்குதல்களையடுத்து சில இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. எனினும், தற்போது அந்த இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆனால் நிலைமை மோசமடையுமானால் கண்காணிப்பு நடவடிக்கைகள் கைவிடப்படும்.
நாங்கள் இங்கு வந்திருப்பது போர்நிறுத்தக் கண்காணிப்பினை மேற்கொள்ளத்தான். அது இல்லாவிட்டால் நாங்கள் இங்கிருந்து சென்றுவிடுவோம்.
நிலைமை சிக்கலடைவதுடன் பாதுகாப்பற்ற நிலைமையிருப்பதாக உணரப்படுகையில் இங்கிருந்து எதனையும் செய்ய முடியாது. இங்கு இருப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை என்றார் ஹக்ரூப் ஹொக்லன்ட்.

http://www.uthayan.com/pages/news/today/10.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நிலைமை மேலும் மோசமடைந்தால் கண்காணிப்புப் பணி கைவிடப்படும் - by Vaanampaadi - 01-12-2006, 10:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)