Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேடல்!
#1
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது!

பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது....

பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது!

பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே
அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது!

இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது!

எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான்
சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது!

தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம்
பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது!

தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் போதுதான்
தேசியத்தலைவனின் அருமை புரிகிறது- தேசம் என்ற ஒன்று வேண்டுமென்ற தேடலும் நடக்கிறது!

இல்லாமல் போய்விட்டது உன் சகோதரன் என்று ஆனதனால் எதிரியை அழிக்கவேண்டும் என்று- உன் மனம் வீரத்தின் திசை நோக்கி தேடல் கொள்கிறது!

தேடல்களூக்கு முதல் உண்டு முடிவில்லை-
இயக்கம் உண்டு இழப்பு இல்லை!
வார்த்தைகள் ஒரு போது இருக்கலாம் -ஆனால் வரைமுறை என்ற ஒன்று அங்கில்லை!

தன்நிலைபற்றி தானே தேடல் கொள்பவன் -கண்மூடி நாளை அவனை மண்மூடி போனாலும் காலத்தை வெல்வான்!

தன்னிலை மறந்தவன் - உலகம் சிரித்து இருக்க ஒடுங்கிப்போய் மூலையிலிருந்து- தனித்திருந்து அழுதழுதே -
தன்னைத்தானே கொல்வான்!
-!
!
Reply


Messages In This Thread
தேடல்! - by வர்ணன் - 01-12-2006, 02:17 AM
[No subject] - by RaMa - 01-12-2006, 07:22 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 07:37 AM
[No subject] - by வர்ணன் - 01-13-2006, 05:15 AM
[No subject] - by தூயா - 01-13-2006, 05:44 AM
[No subject] - by Rasikai - 01-13-2006, 11:05 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)