01-06-2004, 03:59 PM
வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள். எதிர்வரும (தை) 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ரூட்டிங் லோலா ஜோன்ஸ் கலையரங்கில் மாற்று வீடியோ வெளியீடும், மதுரா படைப்பகத்தின் கனவுகள் நிஜமானால் பட ஆரம்ப விழாவும் நடை பெற உள்ளது. இந்த நிகழ்வில் மாற்று படத்தில் பங்களித்த கலைஞர்கள் அனைவரையம் கௌரவிப்பதுடன், புதிய படத்தில் நடிக்க உள்ள கலைஞர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். நடனம், நாடகம் மற்றும் சிறப்பு பேச்சுக்களும் அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் இன்னுமொரு சிறப்பம்சமாக சுவிஸ் கலைஞர் அஜீவனது குறும்படம் ஒன்றும் கனடிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஈழம் நண்பர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

