Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்கு 20 உனக்கு 18
#6
ஒவ்வொரு ரயில் பயணமும் இனிமையானது. அதிலும் த்ரிஷா போன்ற ஜன்னலோர தேவதைகளைச் சுமந்தபடி, போகும் ரயில்களில் பயணிப்பது மேலும் இனிது.

மும்பையிலிருந்து சென்னைக்குத் திரும்பும் நாயகன் தருணுக்கும் அதுபோன்றதொரு இனிய பயணம் வாய்க்கிறது. பயணத்தின் முடிவில் இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டு இறங்கிவிடுகிறார்கள். அப்புறமென்ன?! ரயில் சினேகம் காதலாய் உயிர்ப்பெற, எதிரெதிர் வீடுகளில் குடியிருந்து கொண்டே, ஒருவரை ஒருவர் தேடி அலைகிறார்கள். முடிவு சுபமா? என்பதை அழுத்தமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜோதி கிருஷ்ணா.

இளமையின் துடிப்பும், துணிச்சலும் தெரிய வேண்டும் என்ற தீர்மானத்தோடு காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர், வேகமெடுத்துவிட்ட ரயிலுக்கு இணையாக ஓடி, கடைசிப் பெட்டியில் நாயகன் தாவி ஏறுவது போல் காட்டுவதெல்லாம் அசல் அட்ராசிட்டி எனினுனம் படத்தின் முடிவில் அதே காட்சியை யதார்த்தமாகப் படமாக்கியிருப்பதற்காக (உபயம்: விஷுவல் எபெக்ட்ஸ்) முன்னதை மன்னித்து விடலாம். குடியிருப்புப் பகுதியின் வெவ்வேறு வீதிகளில் நாயகன், நாயகி இருவரும் செல்லும் காட்சியை, ஒரே நேரத்தில் ஒரே ஷாட்டில் காட்டும் ஒளிப்பதிவில் தொடங்கி (ஆர். கணேஷ்), ஒவ்வொரு தொழில் நுட்பத்தையும் நேர்த்தியுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இயக்குனர், தன்னை இன்னொரு ஷங்கராகக் காட்டிக் கொள்ள முனைந்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விடுகிறார். மாநகரத்துக் கல்லுõரி மாணவிகள் நவீனமாக உடை அணிவார்கள் என்றாலும், படத்தில் காட்டுவது போல் கவர்ச்சியின் எல்லையை மீறும் ஆடைகளை அணியத் துணிவார்களா என்பது சந்தேகமே! பெண்களை இழிவு படுத்துகிற இரட்டை அர்த்த வசனங்கள் தேவையா என்பதையும் இயக்குனர் யோசித்திருக்கலாம். இரைச்சலான இசையாக இருந்தாலும் புல்லாங்குழல் போன்ற இனிய வாத்தியங்களை எடுப்பாகப் பயன்படுத்தியிருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்குப் பெரிய பலம், செராண்டிபிட்டி ஆங்கிலப் படத்தின் மூலக் கதையைப் போல.

நன்றி கல்கி
[i][b]
!
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 11-13-2003, 01:05 PM
[No subject] - by vasisutha - 11-19-2003, 03:29 PM
[No subject] - by சாமி - 01-05-2004, 05:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)