01-11-2006, 11:53 AM
திருநெல்வேலியில் படையினரால் மாணவி கடத்தல்@ இளைஞர் மீது சூடு!
Wednesday, January 11 - 04:52:58
(நமது நிருபர்)
யாழ். திருநெல்வேலியில் சிறிலங்காப் படையினர் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட போது மாணவி எழுப்பிய அபயக்குரலைக் கேட்டு ஓடிச் சென்ற இளைஞர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மிரட்டியதால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இச்சம்பவத்தால் மக்களிடையே பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
நேற்று நண்பகல் நேரம் பாற்பண்னை வீதி வழியாக தனியே வந்த குறிப்பிட்ட பாடசாலை மாணவியை தோட்டவெளியில் நடந்து வந்த நான்கு இராணுவத்தினர் கையில் பிடித்து இழுத்து அருகில் உள்ள தோட்ட பற்றைகள் ஊடே கொண்டுசென்றுள்ளனர். பெண்ணின் அவலக்குரலைக் கேட்டு ஓடிச்சென்ற ஒரு இளைஞன் மீது இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியுள்ளதுடன் ஓடும்படியும் இல்லாது விட்டால் சுடப் போவதாகவும் பயமுறுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக பிரதேச செயலாளருக்கு பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மனித உரிமைகள் ஆனைக்குழு அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது
குறிப்பிட்ட இளைஞன் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொது மக்கள் மத்தியில் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த இடத்தில் கூடி அங்குள்ள பற்றைகள் கிணறுகள் அனைத்தும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதே நேரம் குறிப்பிட்ட பகுதிக்கு பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த போர் நிறுத் தக்கண்காணிப்புக் குழுவினரும் பொது மக்களுடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதேநேரம் இராணுவத்தினருடைய முகாமுக்கு ஒரு இளைஞன் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அங்கு சென்று வந்த இளைஞன் குறித்த மாணவியின் மிதிவண்டி பலாலி வீதியில் உள்ள கோண்டாவில் இராணுவ முகாமில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பாற்பண்னை வீதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட இளம் பெண்னைத் தேடிச் சென்ற பொது மக்கள் மீது போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினருடன் வந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களுடன் அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் பற்றைகளைத் தேடிக் கொண்டு இருந்தார்கள் அவ்வேளையில் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினர் ஓருவர் குறிப்பிட்ட இராணுவ முகாமுக்கு பின் புறமாகச் சென்று மீண்டும் முகாமில் இருந்து இராணுவத்தினருடன் திரும்பி வந்தார். வரும் போது அவருடன் வந்த இராணுவத்தினர் மாணவியைத் தேடிய பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன் காரணமாக தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தவர்கள் எங்கு ஓடுவது என்று தெரியாது நாலாபுறமும் சிதறி ஓடினார்கள் தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற போதிலும் போர் நிறுத்தக்க ண்கானிப்புக் குழுவினர் ஏதும் செய்யாது பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=4962

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>