01-10-2006, 11:39 PM
Vasampu Wrote:இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.

