01-10-2006, 02:29 PM
திருநெல்வேலியில் இளம் யுவதி இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
திருநெல்வேலியில் இன்று இளம் யுவதி ஒருவர் சிறீலங்கா இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி பாற்பண்ணைத் தோட்டத்தின் ஊடாக தோட்ட தொழிலாளர்கள் முன்னிலையில் இந்த யுவதி சிறீலங்கா இராணுவத்தினரால் இழுத்துச் செல்வதை கண்டுள்ளனர்.
இளம் யுவதியை விடுவிக்க தோட்டத் தொழிலாளர்கள் முயற்றி செய்தபோது துப்பாக்கி முனையில் தோட்டத் தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதி வாழ் பொதுமக்கள் யாழ் அரச அதிபரிடமும், போர்நிறுத்த கண்காணிப்புக் குழு ,யாழ் மனித உரிமைகள் அமைப்பிடமும் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
யாழ் அரச அதிபர் கணேஸ் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து யாழ் மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பலாலி யாழ் வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு விரைந்துள்ளனர்.
வீதியால் சென்ற வழிப்போக்கர் என்றபடியால் இளம் யுவதி பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. இருந்தும் இராணுவத்தினரால் இழுத்துச் செல்லும் இளம் யுவதிக்கு 22 வயது தொடக்கம் 26 வயது மதிக்கத்தக்கவர் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:பதிவு

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>