01-10-2006, 10:59 AM
லண்டன் என்று சொல்வதை விட இங்கிலாந்தில் வாழும் எனச் சொல்வதே மேல் என நினைக்கிறேன்.
இங்கிலாந்து என்பதை லண்டன் என்றே சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம்.
இதுவே சில குளறுபடிகளை உருவாக்குகிறது என நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் வாழும் தமிழர்களில் பல முக்கிய பரிமாணங்களை அங்கு வந்த போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.
1.ஆரம்ப காலத்தில் கல்வி கற்க என்று வந்து குடியேறியவர்கள்.
2.இவர்களுக்கு வாழ்கைப்பட்டு (மணமுடித்து) வந்து குடியேறியவர்கள்.
3.இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு வெளியேறியவர்கள்.
4.மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு வேலைக்கு போனவர்கள் இலங்கை திரும்பாமலே இங்கிலாந்து வந்து தஞ்சம் கோரியவர்கள்.
5.ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு
இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்
6.ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் தாம் கல்வி கற்க
அல்லது தமது குழந்தைகளின் கல்வியின் நிமித்தம் இங்கிலாந்துக்குள் வந்தவர்கள்.
7. கல்வியின் நிமித்தம் தற்காலத்தில் வந்தவர்கள்.
8.அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் பெற்று நேரடியா வந்தவர்கள்.
9. ஐரோப்பிய நாடுகளில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி வந்தவர்கள்.
இவர்களில் ஆரம்பத்தில் கல்வி கற்க வந்தவர்கள்
இவர்களுக்குப் பின்னால் வந்த எவரையும் கணக்கிலே எடுப்பதில்லை.
இவர்கள் படித்தவர்கள் என்ற தொனியோடு டாம்பீகமாக வாழ்பவர்களாகவே என்னால் உணர முடிந்தது.
இவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பாமரத் தமிழர்களோடு பழகுகிறார்கள்.
அதுவும் ஏதாவது சில விழாக்களில்தான்.
மற்றப்படி உள்ளுணர்வில் வித்தியாசமே இல்லை.
இனக்கலவரக் காலத்தில் அகதியாய் வந்தவர்களை விட
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள்
அங்கு வியாபாரங்களைத் தொடங்கி பெரிய வர்த்தகர்கள் ஆகியிருக்கிறார்கள்.
தவிரவும் அங்கு பிரபலமாக வாழ்வோரும் இவர்கள்தான்.
தாயகத்தில் அரசாங்க உத்தியோகத்தர் எப்படியோ
அந்த நிலையில் முதலில் இங்கிலாந்து வந்து கல்வி கற்றோரும் இருக்கிறார்கள்...........
இலங்கையின் வியாபார நிறுவனங்கள் போல
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் லண்டனில் கோலோச்சுகிறார்கள்.
யாருடைய பெயரிலாவது திருட்டுத் தனமாக வேலை செய்து
அல்லது அரசாங்க இலவசக் கொடுப்பனவுகளோடு வாழ்ந்து அல்லது
ஏனைய இடங்களில் இருந்து குற்றவியல் பிரச்சனைகள் காரணமாக வந்த <b>ஒரு சிலரே</b>
அங்கும் பிரச்சனைகளுக்கு வித்தாகி நிற்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் அரசின் மந்தப் போக்கு என்பதை விட
அரசின் விட்டுக் கொடுப்புகள் கண்டு கொள்ளாதனம் என்பதே சரி.
ஜேர்மன் - சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற போலீஸ் அடையாள அட்டைகளை பரீட்சிக்கும் முறை
அல்லது இருக்கும் வீட்டு முகவரி போன்றவற்றை அரச திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லாம் அங்கு கிடையாது.
எவர் எங்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும்
திறமையிருந்தால் செய்யலாம்.
14 வருடங்களுக்கு மேல் திருட்டுத் தனமாக இருந்ததாக
உறுதிப்படுத்த முடிந்தால் குடியுரிமை கூட பெறலாம்.
சட்டத்தில் உள்ள முக்கிய ஓட்டைகள்...........ஏராளம்.
லண்டனில் இருக்கும் பல வாகனங்களுக்கே
உண்மையான இலக்கத் தகடுகள் இல்லை.
பொய்யானவை.
அதைக் கூட கண்டு கொள்ளாத போலீஸ்.
பெற்றோல் நிலங்களில் வேலை செய்யும் தமிழர்களைக் கேட்டால்
விலாவாரியாக கதை சொல்வார்கள்.
பெற்றோல் அடித்து விட்டு ஓடும் கார் பற்றிய தகவல்களை போலீஸுக்குக் கொடுத்தால்
அந்த நம்பரிலே வாகனமே இல்லை என்பார்களாம்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்..............
தமிழர்கள் மட்டுமல்ல.
ஏனைய இனத்தவரும் இங்கே இப்படித்தான்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.
இதுதான் ஒரு நாள் கெடுதலாகவும் மாறும் நிலைக்கு தள்ளும்.
நாம்தான் கவலைப்படுகிறோமே தவிர அங்கு இதைவிட பெரிய விடயங்கள் சந்தடியின்றியே நடக்கின்றன.
<span style='font-size:19pt;line-height:100%'>(திருத்தத்துக்கு உதவிய <b>மீரா</b>வுக்கு நன்றி.)</span>