Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள்
#1
தனியான சந்திப்பில் மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள்

இந்தியாவிற்கான தனது அண்மைய பயணத்தின் பொழுது மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்தால் இந்திய `அமைதி காக்கும்' படைகளை அனுப்ப வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்குடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டதாகவும் அதற்கு முதலில் தயங்கிய இந்தியப் பிரதமர் பின்னர் குறுகிய சந்திப்பிற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை, அச்சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், அதற்கு இந்தியப் பிரதமர் மறுத்துவிட்டதுடன் யுத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்கிச் செயற்பட்டு அதிகாரப்பகிர்விற்கான வடிவம் தொடர்பில் இணக்கமொன்றை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இரகசிய சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களாலும் பயணத்தின் இறுதியில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில், `ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு' என்ற வாக்கியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாமென்றும் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இதற்கு `ஐக்கிய இலங்கை' என்பது இந்தியாவின் கொள்கையாகும் என்று மன்மோகன் சிங் பதிலளித்தார். எப்படியிருந்த போதிலும் தொடர்ச்சியான வேண்டுகோளினை அடுத்து `ஐக்கிய இலங்கை' என்ற பதத்திற்கு பதிலாக `பிரிக்கப்பட முடியாத இலங்கை' என்ற பதத்தை பயன்படுத்த மன்மோகன் சிங் இணங்கியதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள் - by Vaanampaadi - 01-10-2006, 10:54 AM
[No subject] - by AJeevan - 01-10-2006, 11:18 AM
[No subject] - by Thala - 01-10-2006, 11:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)