01-09-2006, 10:38 PM
<b>இந்தியாவில் கருக்கலைப்பினால் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் அழிக்கப்படுகின்றன.</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41195000/jpg/_41195564_foetus203.jpg' border='0' alt='user posted image'>
<i>வயிற்றுக்குள் சிசு</i>
வயிற்றில் வளரும் கரு ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாயிருந்தால் கருக்கலைப்பு செய்துகொள்ளும் வழக்கத்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் பெண் கருக்கள் சிசுக்கள் அழிக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இவ்வகையான பெண்கருக்கலைப்பைத் தடைசெய்யும் சட்டம் இந்தியாவில் ஒரு தசாப்தகாலத்துக்கும் அதிகமாகவே அமலில் இருந்துவருகிறது என்றாலும், இந்தியாவில் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் நீடிக்கும் வித்தியாசம் இவ்வழக்கம் தொடரவே செய்கிறது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்றவை கிராமிய சமூகங்களில் மட்டும்தான் நடக்கின்றன என்று ஆரம்பத்தில் கூறப்பட்டுவந்தது.
இந்தியாவுக்கு கொஞ்சம் செழிப்பு வந்து நகரங்கள் பெருகினால் மகனுக்குதான் மவுசு என்கிற நிலை மாறும் என்று பலர் நம்பினார்கள். ஆனால் நடந்திருப்பது என்னவோ தலைகீழான மாற்றம்.
ஆண் பெண் விகிதாச்சாரத்தில் வித்தியாசம் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப், ஆனால் இந்தியாவோட அதிக பணக்கார மாநிலமும் அதுதான். தலைநகர் தில்லியிலே, ஆண்களோடு ஒப்பிடும்போது பெண் குழந்தைகள் மிகக் குறைவாக இருக்கும் பகுதிகூட மத்தியதர வர்க்கத்தினர், படித்தவர்கள் வாழும் இடங்கள்தான்.
இன்றைக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்ததினாலே இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கருவை பார்ப்பதற்கான அல்ட்ரா சவுண்ட் கருவிகள் அனைத்தும் அதிகாரிகளிடம் பதிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் இன்றைக்கு அவை சின்னதாக எடை குறைவான வடிவங்களிலே வந்துவிட்டதால் அவை எங்கே இருக்கிறது இல்லை என்பதை கண்காணிப்பது மிகுந்த சிரமமாகிவிட்டது. கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர் சொல்லக்கூடாது என்று இருந்தாலும், யதார்த்தத்திலே சைகைகள், குறியீடுகள் மூலமாக அந்த விஷயம் தெரியப்படுத்தப்பட்டுவிடுகிறது.
மக்களின் எண்ணங்களில் மாற்றம் வராத வரையில் சட்டத்தால் மட்டும் இவ்விஷயத்தில் மாற்றம் கொண்டுவருவது மிகக் கடினமே.
-பீபீசி தமிழ்