01-09-2006, 09:44 PM
லண்டனில் தமிழர் ஒருவர் கொலை செய்யப்படும் போது தான் எமக்குத் தெரிகிறது,ஆனால் லண்டனில் நித்தமும் கொலை,கொள்ளை ,வன்புணர்வு என்பன நடந்தவண்னம் உள்ளன.இதனால் அனேகமாகப் பாதிக்கப் படுவது அண்மயில் குடியேறியோரும்,ஏழ்மையானவர்களும்,கறுப்பு மற்றும் ஆசியன் இனத்தவருமே.லண்டன் பொலீசு நிறுவனப்படுத்தப்பட்ட நிறவெறியுடயது என்பதை அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுக்களே அறிக்கை மூலம் சொல்லி உள்ளன.சும்மா ஒப்புதலுக்கு தொலைக்காட்சியில் அறிக்கை விடுவார்கள்.எங்காவது மேற்தர மக்கள் பாதிக்கப்படும் போது வெகு மும்முரமாக செயற்படுவார்கள்.இப்போது மும்முரமாக இசுலாமிய அமைப்புக்களைக் கண்காணிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.மக்களைப் பாதுகாப்பது என்பது இப்போது இரண்டாம் பட்சமே.
இங்கே ஒட்டுமொத்தமாக லண்டன் தமிழர் இப்படித் தான் என்று சொல்லுவதில் எதுவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.களவுகள் ,கொலைகள் செய்பவர்கள் எல்லாச் சமூகத்திலும் இருகிறார்கள். அண்மையில் ஒரு வெள்ளை இனத்தவர் ஒரு 3 வயதுக் குழந்தையைக் கடத்தி பாலியல் வதை செய்ததுவும் நடந்தது .இது எந்தளவுக்கு மோசமான காரியம்.இதை வைத்து வெள்ளயர் அனைவரும் இப்படித் தான் என்று கூற முடியுமா?