01-09-2006, 09:07 PM
உண்மையில் லண்டனிலுள்ள எல்லாத் தமிழருக்கும் மேலே குறிப்பிட்ட கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் யாருடைய கொலையும் மிகவும் வேதனையான விடயம் தான். முன்பு இன்றும் இலங்கையிலும் இந்நிலை இருந்திருக்கிறது. ஆனால் அவற்றை மேலே குறிப்பிட்டது போல் விவாதிப்பதாக அறியவில்லை. இன்று அப்படியான பல இடங்களில் மாற்றம் நடைபெற்றும் லண்டனில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டது அங்குள்ள அரசியல் வாதிகளால்த் தானென நான் நினைக்கின்றேன். இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறிய லண்டனில் இப்படியான நிலையும் இருந்ததற்காக இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் வெட்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் லண்டனில் காணப்படும் அதிமிஞ்சிய பாகுபாடுகளே. நீங்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து தயைங்கத்தால் தமிழரை கேவலப்படுத்த முயற்சித்திருப்பது தனக்குத்தானே துப்பியது போலாகிவிடுகின்றது.

