01-09-2006, 02:18 PM
<b>குறுக்குவழிகள் - 104</b>
What is Hiberfil.sys file?
Hibernation என்பது, பனி பெய்யும் மேலை நாடுகளில் ஒரு மிருகம் அதிக குளிர் காரணமாகவும் உணவு கிடைக்காததின் காரணமாகவும் சக்தியை சேமித்து உயிர் வாழும்பொருட்டு சில மாதங்களுக்கு நிலத்தின் கீழ் புற்றெடுத்து ஆழ்ந்த உறக்கம்போன்ற நிலையில் கிடந்து, குளிர் முடிய வெளியே வருவதாகும். இதே யுக்தியை கம்பியூட்டரிலும் கையாளும்போது எழுதப்படும் கோப்புத்தான் Hiberfil.sys file என்பது
கம்பியூட்டரின் முன் ஆளில்லாதபோது நாம் ஏற்கனவே set பண்ணியபடி குறிப்பிட்ட சில நிமிடங்களில் கம்பியூட்டர் Hibernation mode க்கு போகும். அப்போது நினைவகத்தில் உள்ளவற்றை ஹார்ட் டிஸ்க்கில் எழுதிவைக்கும். இந்த எழுதிவைக்கப்பட்டதைதான் Hiberfil.sys file என்கிறோம். பின்பு உரியவர் வந்து கம்பியூட்டரில் கைவைக்கும்போது கம்பியூட்டர் உயிர் பெற்று Hiberfil file லில் உள்ளதை நினைவகத்திற்கு ஏற்றிகொள்ளும். அதன் பின் இந்த file தேவையற்ற ஒன்று தான். Laptop கம்பியூட்டர்களில் மின்சார இணைப்பு இல்லாதபோது மின்கலம் பாவிக்கையில் இந்த Hibernation mode மிகவும் பிரயோசனமானது. மற்றும்படியும் சிலர் காலையில் கம்பியூட்டரை on செய்தால் இரவு படுக்கைக்கு போகும்போதுதான் off பண்ணுவார்கள். பகலில் சில மணிநேரங்கள் கம்பியூட்டரின் முன் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த setting பிரயோசனமானது.
எனவே Defragmentation செய்யும் முன்பதாக இந்த file களை நாம் ஹார்ட்டிஸ்க்கில் இருந்து அழிக்கவேண்டும். எப்படி?
Control Panel ஐ திறக்கவும்
Power Options Icon ஐ இரட்டை கிளிக்செய்யவும்.
Hibernate Tab ஐ கிளிக் செய்யவும்
Enable Hibernation என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்து விடவும்.
Tick எடுபட்டவுடன் விண்டோஸ் XP தானகவே இந்த Hiberfil ஐ அழித்துவிடும். பின்பு நீங்கள் Degragmentation செய்யலாம். செய்து முடிந்தவுடன் மீண்டும் Tick ஐ போட்டுவிடலாம்.