01-09-2006, 02:18 PM
யாழில் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்- பொங்கலுக்குப் பின் தாக்குதல்: சிங்கள நாளிதழ் தகவல்
சிறிலங்கா இராணுவம் மீது தைப்பொங்கலுக்குப் பின்னர் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று சிறிலங்கா படைத்தரப்பு கருதுவதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:
விடுதலைப் புலிகள் தமது விமானப்படையிடம் உள்ள இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கரும்புலித் தாக்குதலை அல்லது விமானத் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்களின் உதவியுடன் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டில் ஆர்.பி.பி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி விமானத் தளத்திற்குச் செல்லும் விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக யாழ். குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.
விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே பொருத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் யாழ். நோக்கிப் பயணமாகும் விமானங்கள் மீது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தி விமானங்களைச் சுட்டுவீழ்த்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான செய்தி:
வடக்கிற்குச் செல்லும் விமானங்களை தரையிறக்கும்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாழ்வாகப் பறக்கையில் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த 6 ஆம் நாள் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளைஇ கட்டுவன் கடற்பிரதேசத்தினூடாக இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்பே விமானங்களை தரையிறக்கும் போது அவற்றின் பாதுகாப்பிற்காக இந்தக் கடற்பிரதேசத்தில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>