Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் தமிழ் தேசியப்பிரகடனம்
#3
திருகோணமலை கடற்கரைச் சேனையில் தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு

நாளை நடத்த அழைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழீழ மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கடற்கரைச் சேனையில் தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் வாகரைப் பிரதேச தேசிய எழுச்சிப் பிரகடன ஏற்பாட்டுக் குழு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அறிக்கை வருமாறு;

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், வெருகல் மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழீழ மக்கள் நாளை 10 ஆம் திகதி ஒன்று கூடி தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வினை நடத்தவிருக்கின்றோம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழீழ பிரதேசமெங்கும் இத்தகைய எழுச்சி நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில் 2006 ஆம் ஆண்டில் முதல் எழுச்சி நிகழ்வாக நடைபெறுவதற்கான சகல ஒழுங்குகளும் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மேற்படி பிரதேசங்கள் எங்கும் எழுச்சி ஏற்பாட்டுக் குழுக்கள் எம்மால் அமைக்கப்பட்டு பிரசாரப் பணிகள் கிராமங்கள் தோறும் உணர்வு பூர்வமாக அரங்காற்றுகைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் பேசும் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பின் பின், ஒற்றையாட்சி முறையின் கீழ் இறைமையை இழந்தவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாகவும் உரிமைகள் பறிக்கப்பட்டவர்களாகவும், பாதுகாப்பு அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் நிலையினை பேரினவாத அரசுக்கு நாகரிகமான முறையில் எடுத்துக் கூறிய போதெல்லாம் பல தடவைகள் ஒப்பந்தங்களென்றும், பேச்சுவார்த்தைகளென்றும், பேசப்பட்டு பின்னர் அவை அனைத்துமே எந்த விதமான பயன்பாடுகளுமற்ற வகையில் செயலிழந்து போயின.

தமிழ் பேசும் மக்கள் அடிமைகளாகவும், சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாகவும் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், இறைமை, தன்னாதிக்கம் என்பவை நியாயமானவை. இவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அங்கீகாரம் உள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் சர்வதேசத்தில் தனியான ஒரு இனமாகவும், தங்களைத் தாங்களே ஆளுகின்றவர்களாகவும், தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்களாகவும் உள்ளனர் என்பதை உலகு ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களது உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த குரல் என்பதை "தேசிய எழுச்சிப் பிரகடன நிகழ்வு' மூலம் எடுத்துக் கூறவுள்ளோம்.

தினகுரல்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 01-09-2006, 06:32 AM
[No subject] - by Vaanampaadi - 01-09-2006, 11:57 AM
[No subject] - by Vaanampaadi - 01-09-2006, 12:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)