01-09-2006, 11:52 AM
புலிகள் ஈவிரக்கமற்றவர்களாக இருந்தாலும் நாட்டுக்காக அவர்களுடன் பேச வேண்டியுள்ளது
அமைச்சர் மங்கள கூறுகிறார்
விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்ற ஒரு இயக்கம் என்ற போதிலும் நாட்டின் நலன்
கருதி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
விடுதலைப்புலிகள் கடந்த 25 வருடங்களாக ஈவிரக்கமற்ற இயக்கமாகவே செயற்பட்டு வருகின்றனர். இப்போதும் கூட ஈவிரக்கமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனாலும், நாட்டின் நலன்கருதி அவர்களையும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசிற்கு உள்ளது.
அவர்கள் ஈவிரக்கமற்றவர்கள் என்ற போதிலும் அவர்களும் இலங்கையர்களே. அவர்களும் எமது சகோதர சகோதரிகளே.
ஆனாலும், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தம் காரணமாகவே அவர்களை அரசியல் நீரோட்டத்தினுள் கொண்டுவர முடியும் என நாம் நம்புகிறோம்.
இனப்பிரச்சினைத் தீர்விற்கு யுத்தம் தீர்வல்ல என்பதே அரசின் நிலைப்பாடு.
பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்துமுள்ளோம்.
புலிகள் 80 களில் பயன்படுத்தியதைப் போன்ற தற்கொலைக் குண்டுதாரிகளையே தற்போது அல் - ஹைடா இயக்கத்தினர் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்துவதாக லண்டனிலுள்ள தந்திரோபாயங்களிற்கான கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பங்களையே அல்-ஹைடா அமைப்பும் தற்போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>