Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிட்டண்ணா!
#1
வரிப்புலி ஊர்வலம்!
-----------------

ஆடிவரும் கடலையே - சொல்லு
எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே
ஒளித்து வைத்தாய்?

காற்றே வா மெல்ல எம் கதவு திற-
பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்
சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-
எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!

சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -
சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்
படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்
அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-
விடை சொல்லாமல் போனானே அதுதான் -
ஏனென்று இன்னும் தெரியவில்லை!

எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-
எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-
கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
-!
!
Reply


Messages In This Thread
கிட்டண்ணா! - by வர்ணன் - 01-09-2006, 07:25 AM
[No subject] - by Rasikai - 01-09-2006, 06:03 PM
[No subject] - by sWEEtmICHe - 01-10-2006, 07:58 AM
[No subject] - by RaMa - 01-10-2006, 08:04 AM
[No subject] - by sWEEtmICHe - 01-10-2006, 08:30 AM
[No subject] - by RaMa - 01-10-2006, 08:36 AM
[No subject] - by அருவி - 01-10-2006, 09:07 AM
[No subject] - by sWEEtmICHe - 01-10-2006, 12:14 PM
[No subject] - by hari - 01-10-2006, 01:22 PM
[No subject] - by தூயா - 01-13-2006, 05:47 AM
[No subject] - by மேகநாதன் - 01-13-2006, 06:14 AM
[No subject] - by தூயா - 01-13-2006, 06:36 AM
[No subject] - by iruvizhi - 01-15-2006, 07:31 PM
[No subject] - by RaMa - 01-16-2006, 06:41 AM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 06:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)