01-08-2006, 09:48 PM
sri Wrote:07.01.06
கரவெட்டி வாசி லண்டனில் கத்தியால் குத்திக்கொலை!
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். லண்டன் விம்பிள்டன் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவந்த சுப்பிரமணியம் சிவ குமார்(வயது 38 ) என்பவரே கொலையுண்ட வராவார். கடந்த வியாழனன்று இனந்தெரியாத நபர்களால் இவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று இங்குள்ள அவரது உறவினருக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது.கரணவாய் கிழக்கு, செம்பாடு தூதாவளை யைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந் தையே கொலையுண்டவராவார்.
இவர் விம்பிள்டன் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவந்தார் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக லண்டன் பொலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
உதயன்
Quote:<b> தமிழ் குடும்பஸ்தர் லண்டனில் படுகொலை </b>
வடமராட்சி,
கரவெட்டி, கரணவாய் வாசியான குடும்பஸ்தர் ஒருவர் லண்டன் விம்பிள்டனில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வியாழனன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விம்பிள்டனில் சுப்பர் மார்க்கெட் ஒன்றினை நடத்தி வரும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு படுகெலை செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை சுப்பர் மார்க்கெட்டினை திறப்பதற்காக சென்ற அவரை இனந்தெரியாத நபர்கள் கொலை செய்துள்ளதாகவும் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையென தெரிவிக்கப்படுகிறது.
-வீரகேசரி

