01-08-2006, 07:22 PM
[size=14]<b>பரதநாட்டியத்தை வடமொழியில் பரதமுனிவர் இயற்றினாரா? அல்லது அது தமிழரின் நாட்டியக்கலையா?</b>
தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள். அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று வியாக்கியான்ம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும் பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரதமுனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தைத் தான் தமிழர்கள் இரவல் வாங்கினார்கள் என்று நினைத்துக் கொண்டு, தமிழரின் தமிழ் நாட்டிய விழாவுக்கு வந்து சமஸ்கிருதத்தின் புகழை எண்ணிக் கொண்டும் போகிறார்கள்.
<b>பரதநாட்டியத்தின் (சதிராட்டம்) உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்திருக்க நாமே பரதநாட்டியத்தை நாங்கள்,தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவதன் அறியாமையை என்னவென்பது.</b> சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது.
<b>உண்மையில் பரதநாட்டியம் என்பது 20ம் நூற்றாண்டில் தமிழரின் கலைவடிவமாகிய சதிருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுக்கப்பட்ட பின் இணைக்கப் பட்ட புதிய பெயர்.</b> தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவும் தொடர்பும் கிடையாது. என்று தான் நாங்கள் தமிழர்கள் எங்கள் தலையில் நாங்களே மண்வாரிப் போடுவதை நிறுத்துவோம் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.