01-08-2006, 04:17 PM
பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி
'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.
டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள்.
அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோர்ட்டுக்கு அலைந்து வருகிறார்கள்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>