Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி:
#1
<b>விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் </b>

ராமேசுவரம், ஜன. 8-

இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இலங்கை போர் கப்பல் மூழ்கடிக்கப்பட்டு கடற் படை வீரர்கள் 15 பேர் பலி யானார்கள்.

அதனை தொடர்ந்து இலங் கையில் எந்த நேரத்திலும் மீண்டும் போர் மூளும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள தமிழர்கள் குடும்பம், குடும்பமாக பாது காப்பான இடங்களுக்கு வெளி யேறுகிறார்கள்.

அதோடு ஒரு பகுதியினர் கள்ளத்தனமாக படகுகளில் ஏறி தமிழக பகுதிக்கு வர முயற்சிக்கின்றனர். ஆனாலும் இதனை கண்காணிக்கும் இலங்கை கடற்படையினர் தமிழர்களை தடுத்து நிறுத்தி வருவதால் அவர்கள் எங்கு செல்வது என தவியாய் தவித்து உள்ளனர்.

என்றாலும் இலங்கை தமி ழர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ராமேசுவரம் பகுதியில் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுளளது.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினரும், உள்ளூர் போலீஸ்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் கள் விடிய, விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு சந்தேகப்படும் நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர். மேலும் கடற்படைக்கு சொந்தமான ஹெலி காப்டர்களும் தாழ்வாக பறந்து வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

மேலும் ராமேசுவரம் பகு திக்கு வெளிபகுதி மக்கள் யாராவது வருகிறார்களாப என்பது குறித்தும் கடற்படையினர் உஷார் நிலையில் கண் காணித்து வருகின்றனர்.

இதனிடையே ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந் திரன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் டி.எஸ்.பி. பால சுப்பிரமணியன் தலைமையில் மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந் தது.

அப்போது போலீசார் மீனவர்களிடம், "யாராவது சந்தேகப்படும்படி நபர்கள் தங்கி இருந்தாலோ, அல்லது வந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறி வுரை வழங்கினர்''

மேலும் இலங்கையில் தொடர்ந்து பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீனவர்களை கடற்படையினர் எச்சரித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதி ரொலியாக ராமேசுவரத்தில் போலீ சாரும், கடற்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக் கப்பட்டு உள்ளது.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: - by Vaanampaadi - 01-08-2006, 04:14 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)