Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Jaya writes to PM on Lankan Navy attack on Indian fishermen
#2
இலங்கை கடற்படை சுட்டு ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்
ஜனவரி 08, 2006

ராமேஸ்வரம்:



கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டதில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆண்ட்ரூஸை அழைத்துக் கொண்டு மற்ற மீனவர்கள் தப்பி வந்தனர். ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்ட மீனவர் ஆண்ட்ரூஸ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 03:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)