Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன த
#1
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு

ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்லை கோட்டுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்திய வம்சாவளி தமிழர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியதே என்பதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மலையகத்தில் பிரதான அரசியல் அமைப்புகளான மலையக மக்கள் முன்னணியும், இ.தொ.கா.வும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு அமைப்புகளோடு கைகோர்க்க முன்வந்திருப்பது நல்ல ஒரு அடையாளம் மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே இலங்கை விவகாரத்தில் தனது அக்கறையை ஒளிவு மறைவின்றி துணிச்சலாக வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது தமிழக அமைப்புகள் பலவும் மீண்டும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற வரலாற்று கடமை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவும் முடியாது. அதேநேரம் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியோ, பயிற்சி அளித்தோ நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் கூடாது என்பதை இந்திய அரசுக்கு இடித்துரைக்க நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம்.

இலங்கை இனவாத அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து நாங்கள் செயற்படுவோம் எனவும் அக்கலந்துரையாடலில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜீ.கே.மணி எம்.பி., ஏ.கே.மூர்த்தி எம்.பி., மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

http://www.thinakural.com/New%20web%20site...y/08/news-3.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன த - by Vaanampaadi - 01-08-2006, 03:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 02:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)