Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை
#1
<b>இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை</b>

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது அவருடன் சென்ற தூதுக்குழுவில் விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுக்கும் ஒருவரும் இடம் பெற்றிருந்ததாகவும் அதன் காரணத்தினால் ஜனாதிபதியின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறுவதாக இணையத்தள செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுடன் பயணம் செய்த (விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுப்பவரென்று சந்தேகிக்கப்படும்) அந்த நபர் முன்றுநாள் விஜயத்தின் போது ஜனாதிபதி நடத்திய முக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்றதாக இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு வட்டாரங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றன. இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் என்ற வகையிலேயே அந்தநபர் ராஜபக்‌ஷவுடன் பயணம் செய்ததாகவும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது அந்த நபரின் சகல தொலைபேசி உரையாடல்களையும் தாங்கள் ஒலிப்பதிவு செய்ததாகவும் சில தகவல்களை அவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய வட்டாரங்களுக்கு கொடுத்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள் என்று அந்த இணையத்தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளின் எச்சரிக்கையை ஊர்ஜிதம் செய்த பாதுகாப்பு அமைச்சு வட்டாரம் ஒன்று, மேலதிக விபரங்களைத் தர மறுத்துவிட்டது என்று அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/New%20web%20site...y/08/news-2.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை - by Vaanampaadi - 01-08-2006, 02:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)