Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்...
#1


<b>கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்...</b>

<span style='color:darkblue'>
கடற்கரை உப்புக்காற்றில்

கரைந்து போன எதிர்காலம்...

மாணவர் சமூகம் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி தொடருகின்றது.

\"சகோதரர்களே!

உங்களின் அகால மரணம்

எங்களுக்கு மனரணம்

அந்த இறுதித் துடிப்பு

சிந்திய உதிரத்துளி

சல்லடையாகிப் போன

கபால ஓடுகள்

கடற்கரைக் காற்றில்

கரைந்து போன எதிர்காலம்

மறக்காது இவற்றை

எங்கள் திருமலை சமூகம்.

2006 ஆம் ஆண்டு பிறந்து இரண்டாம்நாள் மாலை வேளையில்இ வழமை போன்று கடற்கரையோரக் காந்தி சிலை அருகே கூடுகின்றார்கள். கலந்துரையாடுகின்றார்கள். சிரித்துப் பேசி மகிழ்கின்றார்கள். பேரினவாத வடிவில் யமன் வந்தான். முதலில் மூன்று சக்கரங்களில்இ நான்கு சக்கரங்களில். திருகோணமலை கல்விச் சமூகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் ஐந்து இளம் குருத்துக்கள் துப்பாக்கிக் குண்டுகளால் பிடுங்கி எறியப்பட்டன.

அந்தக் கடைசி நிமிடங்களில்...

"அப்பாஇ ரவுண்டஅப் செய்துள்ளார்கள். வீதியில் முழங்காலில் நிற்க வைத்துள்ளார்கள்"- செல்போனில் மகன் தகவல் அனுப்புகின்றார். அதேநேரத்தில் தந்தையும் போனில் மகன் எங்கே நிற்கிறார் என்பதையறிய முயற்சிக்கின்றார். ஒரே நேரத்தில் இருவரும் முயற்சித்தனர். இது தகவல் பரிமாற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இறுதியில் மகனின் மரணமே அவருக்கு செய்தியாகக் கிடைக்கிறது.

"அம்மாஇ கடற்கரைக்குப் போய்விட்டு வருகின்றேன். அப்பாஇ கடற்கரைக்குப் போய்விட்டு வருகின்றேன்"- வழமை போன்று தான் ஐவரும் புறப்பட்டுச் சென்றனர். ஒரே ஆண்டில் (1985) பிறந்தவர்கள். வெவ்வேறு திகதிகளில் பிறந்தாலும் ஒரே ஆண்டில் (2006) ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் மறைந்தனர்.

அவர்கள் பிறந்த திகதிகள் வருமாறு: த.சிவானந்தா 06.04.1985இ ம.ரஜிகர் 22.09.1985இ யோ.ஹேமச்சந்திரன் 04.03.1985இ லோ.றொஹாந்த் 07.04.1985இ ச.சஜேந்திரன் 16.09.1985.

ரஜீஹரின் வீடு டைக் வீதியில்இ சிவானந்தாவின் வீடு வன்னியா ஒழுங்கையில்இ ஹேமச்சந்திராவின் வீடு சுங்கவீதியில்இ றொஹாந்தின் வீடு சிவன் வீதியில்இ சஜேந்திரனின் வீடு வித்தியாலயம் ஒழுங்கையில்.

இவ்வைந்து வீடுகளில் மாத்திரமல்லஇ திருகோணமலையில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட சொந்த இழப்பாகவே இவர்களின் மரணத்தை திருகோணமலைச் சமூகம் கருதியது.

அறிந்தவர்களும் அறியாதவர்களும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பறி கொடுத்தவர்களை அனைத்து வாழ்நாளில் என்றுமே ஈடு செய்ய முடியாத இப்பேரிழப்பை எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போன்றீர்கள் என்று கண்ணீர் உகுத்தனர். சிங்களஇ இஸ்லாமிய மக்களும் சென்று அஞ்சலி செய்தனர்.

கல்வியில் மாத்திரமல்ல.விளையாட்டுத்துறையிலும் சாதனை நிலை நாட்டியவர்கள் அவர்கள். வீட்டில் ரஜீஹரின் பூதவுடல் முன்னால் வரிசையாக ஒன்றல்லஇ இரண்டல்லஇ பதினெட்டுக்கு அதிகமான வெற்றிக் கிண்ணங்கள்இ பதக்கங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மறைந்த ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் பல சாதனைகள். கணினி யுகத்திலே புகுந்தவர்கள் அவர்கள். படிக்கும் காலத்திலேயே தங்களின் திறமையை வெளிப்படுத்தியவர்கள்.

மூன்றாம் திகதி திருகோணமலை ஆஸ்பத்திரியில் மரண விசாரணை நடத்தியது. ஆஸ்பத்திரியை மொய்த்தது கூட்டம். ஆவேசமாகக் காணப்பட்டது. ஒருவர் சட்டையைத் திறந்து மார்ப்பைக் காட்டி ஹஎன்னைச் சுடுங்கள்' என்றார். காவலுக்கு நின்றவர்களில் ஒருவர் தலையைக் குனிந்து கொண்டார்.

நான்காம் திகதி முழுவதும் மாணவர்களின் பூதவுடல்கள் அவரவர் வீடுகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. நகரம் வெறிச் சோடிக் காணப்பட்டது. நகரமே இறப்பு வீடாகத் தெரிந்தது.

ஐந்தாம் திகதி வியாழக்கிழமை காலை திருகோணமலையின் வரலாறு காணாத நிகழ்வு ஆரம்பமானது. ரஜிஹர்இ ஹேமச்சந்திரன்இ சிவானந்தா ஆகியோரின் பூதவுடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை வந்தடைகின்றன. பின்னர் சஜேந்திரன்இ றோஹாந்த் ஆகியோரின் பூதவுடல்கள்இ வித்தியாலய வீதிஇ சிவன் வீதி ஆகிய இடங்களிலிருந்து கல்லூரி மைதானத்தை வந்தடைகின்றன. ஐந்து பூதவுடல்களும் அடங்கிய சவப்பெட்டிகள்இ மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலின் கீழ் வைக்கப்படுகின்றன. பூதவுடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் மக்கள் அஞ்சலிக்காக திறக்கப்படுகின்றன.

வருண பகவானும் கண்ணிர் சிந்த ஆரம்பிக்கின்றான். (இளம் சிட்டுக்கள் மீளாத்துயரிலில் கோணேசப் பெருமானைப் பார்த்த வண்ணம் ஆழ்ந்திருக்கும் காட்சி. தலைமாட்டில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் அருள்பாலிக்கும் காட்சி. கற்ற இந்துஇ கிறிஸ்தவஇ இஸ்லாமிய மதப் பெரியார்கள்) மீளாத் துயில்இ பார்ப்பவர்களை வாய்விட்டு அலற வைத்தது. ஒவ்வொரு பூதவுடலைச் சுற்றி வர நின்று கொண்டிருந்த பெற்றோர்இ உறவினர்கள்இ நண்பர்கள் மட்டுமல்லஇ திருகோணமலையே அழுதது. வானமும் தனது பங்கை அளித்ததுஇ முதலில் தூறலாகஇ பின்னர் பெரிய மழையாக - மதப் பெரியார்கள்இ மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இரங்கலுரை நிகழ்த்தினர். மாணவர் மீது மேற்கொள்ளப்பட்ட படையினரின் கொடூரத் தாக்குதலை வன்மையாக் கண்டித்தனர். தமிழ் மாணவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி அதிபர் எம்.இராஜரத்தினம் அஞ்சலி நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. சுவாமி விபுலானந்தா அடிகளார் அதிபராக இருந்த கல்லூரிஇ இக்கல்லூரி அதன் வரலாற்றில் இவ்வாறான சோகத்தைச் சந்தித்தது இல்லை. அண்மைக்காலமாக தேசியப் பரீட்சைகளில் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை கல்லூரியின் மாணவர்கள் ஈட்டி வந்துள்ளனர்.

ஐந்து மாணவர்களும் இக் கல்லூரியில் 2004இ 2005 ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்றவர்கள். ஐவரும் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்கள். அவர்கள் வளர்ச்சிக்காக பெற்றோர்இ பாடசாலைஇ கல்விச் சமூகம் செய்து வந்துள்ள சமூகத்திற்கு நல்ல முதலீடாக மாற்றம் பெறும் வேளையில்இ அவர்கள் நம்மத்தியிலிருந்து பலாத்காரமாகப் பிரித்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். நான் ஒரு துர்ப்பாக்கியசாலியாக இங்கு நிற்கின்றேன்" கண்கள் குளமாகக் கூறுகின்றார் அதிபர் இராஜரத்னம். இம்மாணவர்களின் உயிர்த்தியாகம் எமது சமூகத்திற்கு நிச்சயம் விடிவைக் கொண்டு வந்தே ஆகும் என்றும் அவர் கூறினார்.

வரலாறு காணாத சனசமுத்திரம் கல்லூரி மைதானத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம்இ கடற்படைத்தள வீதி வழியாக திருமலை பஸ் நிலைய சுற்று வளைவுக்கு சென்றுஇ பின்னர் அங்கிருந்து பிரதான வீதி ஊடாக மடத்தடிக்குச் சென்றுஇ ரயில் நிலைய வீதியாக ஏகாம்பரம் வீதியை அடைந்துஇ திருகோணமலை இந்து மயானத்தை அடைகிறது. வித்துடல்கள் புதைகுழிக்குள்இ ஹஆராரோ' பாடிய தாய்மார்கள் கதறிஇ ஹஉன்னை வளர்த்தேன் ஊருக்கு நல்லது செய்ய' என்ற தந்தையர்கள் அரற்ற ஒவ்வொன்றாக வைக்கப்படுகின்றன.

"முதலீடுகள்' புதைக்கப்படுகின்றன; விடிவு தெரிகின்றது.
</span>
தகவல்: தினக்குரல்
[size=14] ' '
Reply


Messages In This Thread
கடற்கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்... - by தூயவன் - 01-08-2006, 02:10 PM
[No subject] - by Mathuran - 01-08-2006, 02:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)