01-08-2006, 11:31 AM
Quote:திறந்துள்ள இவ் வாயை மூட பேரினவாதிகள் கடும் பிரயத்தனமெடுப்பார்கள் என்பது திண்ணம். அதற்கு வழமைபோல் இந்தியாவுக்கு `புலிப் பேதி'யை கொடுப்பார்களென்பதும் தமிழகத்திலுள்ள `புலி விரோதி' களுக்கு தூபமிடுவார்களென்பதும் வரலாறு சொல்லும் பாடம்.
இவற்றிற்கான சில எடுப்புகளை ஏற்கனவே "இந்து ராம், சுப்புரமணியசுவாமி,.." போன்றோர் மூலம் தொடங்கப்பட்டு விட்டது. இவற்றின் உச்சக்கட்டமாக சில வன்முறை நாடகங்கள் கூட அரங்கேற்றப்பட்டு, புலி முத்திரைகள் கூட குத்தப்படலாம்!!!!! இக்குழப்பங்களைச் செய்விக்க, இன்றும் இந்தியாவில் முகாமிட்டிருக்கும் இன விரோதக் கூலிகளான "பரந்தன் ராசன், கருணா, வரதராசப்பெருமாள்" போன்றோர் இலகுவில் கை கொடுப்பார்கள் மாத்திரமின்றி தாமே அரங்கேற்றுவதற்கும் தயாராக இருப்பார்கள்!! இந்த நாடகத்திற்காக "கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், குண்டுவெடிப்புக்கள்" கூட நடத்தப்படலாம்!!!! இக்கூலிகளுக்கு இவைகள் கைவந்த கலைகளே!!!!!!!!!!
இவற்றிற்கு தமிழகத்தில் உணர்வாலர்களின் பேரெழுச்சி பதிலளிக்கும்.
" "

