01-08-2006, 11:02 AM
Quote:......
அப்படியொரு யுத்தம் மூளும்போது அதில் பிராந்திய சக்திகளின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கும் என்பதன் அடிப்படையில் ஒரு புதிய வலுச்சமநிலை உருவாகும். அப்புதிய வலுச்சமநிலையே மற்றொருகட்டச் சமாதான முயற்சிகளின் ஆயுளையும் அவற்றுக்கிருக்கக் கூடிய வரையறைகளையும் தீர்மானிக்கும். அல்லது,அதுவும்கூட அதற்குமுந்திய எல்லா வலுச்சமநிலைகளையும் போல யுத்தத்தை மற்றொரு கட்டத்துக்கு ஒத்தி வைக்கப்போகும் மற்றொரு இடைத்தரிப்புக் காலத்துக்குரிய அடிப்படையாக அமைதல் கூடும்.
ஈழத்தில் நடந்த ஒவ்வொரு யுத்தமும், எமது போராட்டத்தை ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்றது. இறுதியாக நடந்த ஈழப்போர் கூட எம்மை சர்வதேசத்துக்கு இழுத்தது. நிச்சயமாக நடைபெறப்போகும் இறுதியுத்தமும் "தெற்கு சூடானிலோ, கிழக்கு தீமோரிலோ" சர்வதேசம் ஏற்படுத்திய தீர்வை எமக்குத்தரும்!!
" "

