Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மஹிந்தவின் இந்திய விஜயம், தோல்வி?
#3
<b>பயனற்றுப்போன பயணம்</b>
அமெரிக்கா சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கு எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அவரே பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் அல்ல ஒரு பயங்கரவாத இயக்கம். படுகொலைகள் புரிவதில் அல்;-ஹைதா இயக்கத்தை விட மோசமான இயக்கம் எனக் கொட்டித்தீர்த்த போதும்- மங்கள சமரவீர எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிட்டவில்லை.

அமெரிக்க அரசு சிறிலங்கா அரசின் விருப்பத்தை நிறைவு செய்யாமல் போனமைக்கு தமிழ் மக்களுக்குச் சார்பானதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது அர்த்தமல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக அது மேற்கொண்டுள்ள தீர்மானத்தின் பாற்பட்டதென்றே ஆகும்.

இந்தியாவிற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அதனை அடுத்து சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் மேற்கொண்ட உத்தியோகபுூர்வ பயணங்கள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு மங்கள சமரவீரவின் பயணம் அமைந்தது.
...
......
........
இவை ஒருபுறம் இருக்கத்தக்கதாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இணைத்தலைமை நாடுகள் இனப்பிரச்சினை தொடர்பாக தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது வன்முறைகளைத் தவிர்த்தது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முற்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

இதனை அவர்கள் வெளிப்படையாகப் பல தடவை தெரிவித்தும் உள்ளனர். இதே சமயம் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வென்பது சாத்தியப்பட மாட்டாது என்பதும் அவர் களால் விளங்கிக் கொள்ளப்பட்டதொன்றாகவே கொள்ள முடியும். இதன் வெளிப்பாடாகவே மேற்குலகிலுள்ள சமஷ்டி பற்றிப் பரிசீலிப்பதற்கு அந்நாடுகள் தயாராக உள்ளன.

அது மாத்திரமன்றி நோர்வே வகிக்கும், ஏற்பாட்டாளர் பாத்திரத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அண்மைக்காலத்தில் கூட இது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயன்றமை இனப்பிரச்சினை தொடர்பாக மேற்கு நாடுகளின்அணுகு முறையைப் புரிந்து கொள்ள முடியாமல் போனதன் வெளிப்பாடேயாகும்.

அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்குமானால் இணைத் தலைமை நாடுகள் என்ற hPதியில் அமெரிக்கா உட்பட்ட நான்கு நாடுகளால், மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முடிவுகளை கருத்திற்கொள்ளாது அந்நாடுகள் ஒன்றில் போய் ஆதரவு வேண்டி நிற்பது எத்தகைய அறிவிலித்தனமானது. மாறாக, மங்கள சமரவீரவின் பேச்சைக் கேட்டு அமெரிக்கா முடிவொன்றை எடுக்குமானால், அமெரிக்காவும், ஏனைய இணைத்தலைமை நாடு களும், இதுவரை எடுத்த தீர்மானங்களும், முடிவுகளும், தவறா னவை என்றல்லவா அர்த்தமாகிவிடும்?.

நன்றி: ஈழநாதம்
http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/08.htm
Reply


Messages In This Thread
[No subject] - by sooriyamuhi - 12-31-2005, 04:53 AM
[No subject] - by kurukaalapoovan - 01-08-2006, 10:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)