01-08-2006, 06:55 AM
Snegethy Wrote:றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.
பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.
நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும் அம்மம்மா சண்டை பிடிக்க வரவேயில்லை.
ஆனால் ஒன்று உப்பிடி எல்லாம் கோவம் போட்ட ஆக்களோட தான் இன்னும் தொடர்பிருக்கு.
றமாக்கா நீங்கள் சொன்ன மாதிரிதான் நாங்களும் செத்தாலும் வரமாட்டம் செத்த வீட்டுக்கும் வரமாட்டம் என்று சொன்னம்....ஒரு காலத்தில <b>வடமராட்சியில பூரான் கடிச்சு</b> நிறைய பேர் செத்தவை..அதில எங்கட நண்பியும் ஒராள்.நாலு அண்ணன் மாருக்கு ஒரே தங்கை.அங்க போகும்வரயிலும் அழுவன் என்று நினைக்கவேயில்லை.உடம்பெல்லாம் விசம் ஏறிப்போன அவளைப்பார்த்ததுதான் தாமதம்..கடவுளே.
<img src='http://perso.wanadoo.fr/eycb/scorpions/Images/FranzwerneriG.gif' border='0' alt='user posted image'>
கறுப்புத் தேள் - scorpion
<img src='http://lancaster.unl.edu/enviro/Images/Insects/gardncnt.jpg' border='0' alt='user posted image'>
மட்டத்தேள் - Centipede
சிநேகிதி.. இந்தப் பூரான் செய்தி அடிக்கடி உதயனில வாறது..தென்மராட்சிப்பக்கம் மழை காலத்தில பெரிய கறுப்பு தேள் (ஸ்கோப்பியன் - scorpion) வரும்.. கோழி கூட அதுக்குப் பயம். மட்டத்தேளும் வரும்.. ஆனா இந்தப் பூரான் எண்டதையே கண்டத்தில்லை..! எப்படி இருக்கும்.. அது கடிச்சு ஆக்கள் இறக்கினம் என்று செய்திவாறது.. இது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களன்.. தெரிஞ்சா..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

