Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை
#1
<b>இனவெறிப்படையின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள் -மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை-</b>
Sunday, January 08 - 06:29:45

(நமது நிருபர்)
உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்களே! யுவதிகளே!! சற்றுச் சிந்தியுங்கள்!!! என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டு ள்ள அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:-

அண்மைக் காலமாக தமிழர்கள் மீதான தாக்குதலையும், படுகொலையையும் சிங்கள இனவெறிப் படைகள் தமிழர் தாயக மெங்கும் திட்டமிட்டுச் சூட்சுமமாக நடாத்தி வருகின்றது. அப்பாவித் தமிழ் மக்களைக் கைது செய்து சுட்டுக் கொன்று விட்டு அவர்களது கைகளுக்குள் கைக்குண்டைத் திணித்துப் புலியெனக் கூறியும் வருகின்றது.

அதற்கு எடுத்துக் காட்டாக கோரகல்லி மடுவில் கடந்த 05.01.2006 இராஜகுமார்-பூவேந்தன் என்னும் இளைஞன் அந்நியப் படையான ஒரு சிங்களச் சிப்பாய் பரிசோதனை எனும் பெயரில் இறங்கி நடக்க விட இன்னுமொரு கொலை வெறிபிடித்த சிப்பாய் இவ்விளைஞனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவனின் கைக்குள் கைக்குண்டைத் திணித்துவிட்டு பற்றைக்குள் இழுத்து தூக்கியெறிந்து விட்டு புலியெனக் கதைகூறிய சம்பவம் நாம் அறிந்ததே.

அந்த வகையில் முறக் கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான், வாழைச்சேனை வந்தாறுமூலை போன்ற இடங்களில் கைது செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகின்றனர்.

எனவே, எமது அன்பான இளைஞர், யுவதிகளே! நீங்கள் அனைவரும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய நேரமிது. அன்னியனின் கையில் அகப்பட்டு அநியாயமாக நீங்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கலாமா? சற்றுச் சிந்தியுங்கள்!!

அப்பாவிகளான உங்களைப் பிடித்து ஈவிரக்கவின்றிச் சுட்டுக் கொன்றுவிட்டு உங்களது கைகளுக்குள் கைக்குண்டையோ அல்லது துப்பாக்கியையோ திணித்துவிட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்கப் புயலாகப் புறப்படுங்கள்.

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=4869
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மட்டு.மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை - by Vaanampaadi - 01-08-2006, 03:43 AM
[No subject] - by ஊமை - 01-08-2006, 06:53 PM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 07:08 PM
[No subject] - by ஊமை - 01-08-2006, 08:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)