Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள்
#1
<b>தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள்: மகிந்த வேண்டுகோள்- புத்த ஜயந்தி குழு நிராகரிப்பு </b>
[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 05:38 ஈழம்] [ச.விமலராஜா]
இலங்கைக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை அழைப்பதைத் தவிர்க்குமாறு சிறிலங்காவின் புத்த ஜயந்தி குழுவினருக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் மகிந்தவின் தூதுவர், புத்த ஜயந்தி 2550- விழாக் குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.

தலாய்லாமாவை அழைப்பதன் மூலம் சீனாவுக்கும் சிறிலங்காவுக்குமான உறவு பாதிக்கும் என்று மகிந்தவின் தூதுவர் விளக்கியுள்ளார்.

ஆனால் மகிந்த ராஜபக்சவினது வேண்டுகோளை புத்த ஜயந்தி குழுவினர் நிராகரித்துள்ளனர்.

தலாய்லாமாவை அழைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். புத்த மதத்தை ஏற்றுள்ள சிறிலங்காவுக்கு திபெத்திய புத்த மதத் தலைவரின் வருகையானது பெருமை சேர்க்கக் கூடியது என்று மகிந்தவின் தூதுவருக்கு புத்த ஜயந்தி குழுவினர் பதில் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்காவுக்கான சீன தூதரக அதிகாரி சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பின் போது தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைப்பதை மறு பரிசீலனை செய்யுமாறு சீன அரசாங்கம் சார்பில் அந்த அதிகாரி மகிந்தவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

சீன அதிகாரியுடனான சந்திப்பையடுத்து மகிந்த ராஜபக்ச தனது தூதுவரை அனுப்பியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்காவுக்கான சீனத் தூதரகப் பேச்சாளர், தலாய்லாமா விடயத்தில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது. ஆகையால் புத்த ஜயந்தி குழுவினருடன்தான் இது பற்றி பேச வேண்டியுள்ளது என்றார் அவர்.

தலாய்லாமாவை அழைப்பதற்கு ஜே.வி.பி.யும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சீனா அரசாஙக்த்திற்கு எதிராக உலகப் புகழ் பெற்ற புத்த மதத் தலைவர் தலாய்லாமாவை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது என்பதால் அவரை அழைக்க ஜே.வி.பி. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தலாய்லாமா, புத்த காயாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.டி.சில்வா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தலாய்லாமாவை அழைப்பதைத் தவிருங்கள் - by Vaanampaadi - 01-08-2006, 03:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)