Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படையின் Dvora ரோந்து படகை காணவில்லை
#36
<b>"டோறா' மூழ்கடிப்பு!
13 கடற்படையினர் பலி!
தமக்குத் தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு </b>

இலங்கைக் கடற்படையின் "டோறா' அதிவேகப் பீரங் கிப் படகொன்று நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின்போது மூழ்கியது. திருகோணமலைக் கடற் பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த சமயம் குண்டுகள் பொருத் தப்பட்ட மீன்பிடிப் படகொன்று மோதித் தாக்கியதில் இந் தப் படகு அதிலிருந்த பதினைந்து கடற்படை சிப்பாய் களுடன் அடையாளங்கள் தெரியாமலேயே கடலில் மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்படுகிறது.
இது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் என்று இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரி கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், அதனை மறுத்திருக் கும் விடுதலைப் புலிகள் இந்தச் சம்பவத்தோடு தமக்குத் தொடர்பு எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறி யிருக்கின்றனர்.
திருமலைக் கடலில் "பவுல் முனைப் பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மூழ் கிய படகில் இருந்த இரண்டு கடற்படைச் சிப்பாய்கள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின் றனர். ஏனைய 13 பேரும் காணாமற்போய் விட்டனர் என்று கடற்படை தெரிவித்திருக் கின்றது.
இந்தக் கடற்பகுதியில் அதிகாலையில் பெரும் வெடியோசை ஒன்று கேட்டதென் பதை திருமலைப் பொலீஸாரும் மீனவர் களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். காணா மற்போன கடற்படையினர் அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. எனினும் அவர்களைத் தேடும் பணி கள் முழுவீச்சில் இடம்பெறுவதாக கடற்படை தெரிவித்தது.
மூழ்கிய "டோறாப்' படகை ஒரு தற் கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வேறொரு படகு மோதியி ருக்கலாம் என்று தாம் நம்புவதாக கடற்படைப் பேச்சாளர் ஜெயந்த பெரேரா தெரிவித்திருக் கின்றார். இந்தப் படகு முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதென்பதை இராணுவப் பேச்சா ளர் கேணல் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத் தினார்.
இந்தப் படகில் இருந்த இரண்டு அதிகாரி கள் உட்பட 15 கடற்படையினரில் இருவர் கடலில் குதித்து நீந்திக்கொண்டிருந்தபோது காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருக்கின்றனர். தாக்குதல் நடந்த விதம் தொடர்பாக அவர்களிடமும் தகவல் பெறப் பட இருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரி வித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசுத் தரப் பில் இருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் நேற்று நள்ளிரவு வரை வெளியிடப் படவில்லை. எனினும் தாக்குதல் தொடர்பாக இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.
திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு "டோறாப்' படகு களில் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டி ருக்கின்றது. "டோறாப்' படகை நோக்கி வேக மாக வந்த கண்ணாடி இழைப்பட கொன்றை சோதனையிட கடற்படையினர் முயன்றபோது அந்தப் படகு "டோறா'வுடன் மோதி வெடித் தது என்று கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இரண்டு "டோறாப்' படகுகளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவற்றில் ஒன்றின் தொடர்பு சாதனங்களில் தகவல் ஒன்று பதிவாகியது எனக் கூறப்படுகின்றது.
"முன்னால் வருகின்ற டோறாப் படகை மோதப்போகிறோம்' என்று சந்தேகத்துக் குரிய கண்ணாடி இழைப் படகில் இருந்து முல்லைத்தீவு சல்லிப் பகுதியில் உள்ள தளம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட தகவலே அது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தகவல் தெரியவந்ததுடன் "டோறா' வில் இருந்த கடற்படையினர் தமது கட்டுப் பாட்டு அறையுடன தொடர்பை ஏற்படுத்தி தாங்கள் எத்தகைய பதில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். சந்தேகத்துக்குரிய அந்தப் படகை சோதனை யிடுமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களுக்கு உத்தரவு வந்தது. அதன்படி படகைச் சோதனைசெய்ய முயன்றபோதே அந்தப் படகு டேறாப் படகுடன் மோதி வெடித்தது என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளால் வழமையாக நடத்தப்படுகின்ற தற்கொலைத் தாக்குதல் பாணியிலானது என்று பாதுகாப் புத் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி தமக்கு எதுவுமே தெரியாது. அதில் புலி களுக்கு எதுவித சம்பந்தமும் கிடையாது என்று புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.

http://www.uthayan.com/pages/news/today/01.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithaa - 01-06-2006, 11:39 PM
[No subject] - by நர்மதா - 01-06-2006, 11:39 PM
[No subject] - by kavithaa - 01-07-2006, 12:16 AM
[No subject] - by vasisutha - 01-07-2006, 12:42 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 12:50 AM
[No subject] - by Thala - 01-07-2006, 12:57 AM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 12:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 01-07-2006, 01:29 AM
[No subject] - by ஈழமகன் - 01-07-2006, 02:00 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 02:35 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 03:04 AM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 05:26 AM
[No subject] - by வர்ணன் - 01-07-2006, 05:35 AM
[No subject] - by நர்மதா - 01-07-2006, 11:35 AM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 12:14 PM
[No subject] - by pepsi - 01-07-2006, 12:58 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 01:06 PM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 01:26 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 01:35 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 02:05 PM
[No subject] - by Vaanampaadi - 01-07-2006, 03:55 PM
[No subject] - by vasisutha - 01-07-2006, 03:58 PM
[No subject] - by vasisutha - 01-07-2006, 04:00 PM
[No subject] - by ஊமை - 01-07-2006, 04:50 PM
[No subject] - by Sriramanan - 01-07-2006, 05:31 PM
[No subject] - by kirubans - 01-07-2006, 06:14 PM
[No subject] - by kurukaalapoovan - 01-07-2006, 06:27 PM
[No subject] - by puthiravan - 01-07-2006, 10:27 PM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 12:00 AM
[No subject] - by Sukumaran - 01-08-2006, 12:24 AM
[No subject] - by sanjee05 - 01-08-2006, 12:59 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:19 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:46 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:48 AM
[No subject] - by Vaanampaadi - 01-08-2006, 02:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)